பக்கம்:கண் திறக்குமா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கண் திறக்குமா?

ஒருவாறு சகித்துக்கொள்ளும்; ‘பெற்ற மனம்’ சகித்துக் கொள்ளுமா?

இந்த எண்ணத்துக்கேற்றாற்போல் என் தங்கை சித்ரா எனக்கு எழுதிய ஓரிரண்டு கடிதங்களிலும் நான் எத்தகைய ஆறுதலையும் காணவில்லை. அந்தக் கடிதங்களெல்லாம் ஒரே அழுகைதான்! - அம்மா படுத்த படுக்கையாகி விட்டார்களென்றும், தம்முணர்வை இழந்து தவியாய்த் தவிக்கிறார்களென்றும், அவர்களுடைய வாய் மட்டும் அடிக்கடி ‘செல்வம், செல்வம்’ என்று முனகிக் கொண்டிருக்கிறதென்றும், அந்த நிலையிலே அவர்களை விட்டுவிட்டுத் தன்னால் அப்படி இப்படி ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லையென்றும், அதனால்தான் ஆறு மாதங்களாகியும் என்னை ஒரு முறைகூட வந்து பார்க்க முடியவில்லையென்றும் அவள் எழுதியிருந்தாள். இன்னும் அம்மாவை வந்து பார்க்கும் டாக்டர்கள் நம்பிக்கையிழந்த முகத்துடன் காண்கிறார்கள் என்றும் அவள் தெரிவித்திருந்தாள்.

அவளால்தான் நம்மை வந்து பார்க்க முடியவில்லையே, நாமாவது பரோலில் சென்று அவளையும் அம்மாவையும் பார்த்து வருவோமே என்று எண்ணி, அதற்கு வேண்டிய முயற்சி செய்து பார்த்தேன்; அதிகாரிகள் அசையவில்லை!

ன்றிரவு சிறைக்கென்றே உண்டான ஒரு பிரத்தியேக வாசனை என் மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது. அதை நான் அனுபவித்த வண்ணம் படுத்துக் கொண்டிருந்தேன். என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் எனக்கு வெகுநேரம் வரை தூக்கமே வரவில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் - மனமோ ஒரு நிலையில் இல்லாமலிருந்தது: தலையோ தலையணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/61&oldid=1379039" இலிருந்து மீள்விக்கப்பட்டது