பக்கம்:கண் திறக்குமா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கண் திறக்குமா?

தில்லையாம்; தேசத்தையே சிறைச்சாலையாகக் கருதுவார்களாம். அன்னிய ஆதிக்கத்திலிருந்து என்று தேசம் விடுதலை யடைகிறதோ, அன்றுதான் அவர்களுக்கும் உண்மையான விடுதலையாம்!

அத்தகைய தேசபக்தர்கள் வேண்டுமானால், 'நாளைக்கு விடுதலை!' என்று தெரிந்தாலும் எத்தகைய உணர்ச்சிக்கும் ஆளாகாமல் இருந்திருக்கலாம்; அல்லது ஆளாகாமல் இருந்ததாகச் சொல்லிக்கொள்ளலாம். அடியேன் அவ்வாறு சொல்லிக்கொள்வதற்கில்லை. ஏனெனில், 'நாளைக்கு விடுதலை!' என்று அறிந்ததும் அதற்கு முதல் நாளிலிருந்தே நான் முற்றிலும் மாறிவிட்டேன். அத்தனை நாளும் என்னைப் பீடித்திருந்த சோர்வு அன்று முதல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக என்றுமில்லாத சுறுசுறுப்பு என்னை வந்து பற்றிக் கொண்டது. உண்மையில் அன்று நான் ஆகாய வீதியில் வட்டமிட்டுப் பறக்கவில்லையென்றாலும், தரையில் நடப்பது போன்ற உணர்ச்சியே எனக்கு இருக்கவில்லை.

மூன்று வருடகாலம் சிறைவாசம் செய்தது தாய் நாட்டின் விடுதலைக்காக. ஆனால் தாய்நாட்டுக்கா இப்போது விடுதலை கிடைத்தது? - இல்லை; தாயாருக்குத் தான் விடுதலை கிடைத்துவிட்டது!

தாயைப் பிரிந்த சித்ரா என்ன ஆகியிருப்பாள்? கனவில் கண்டபடி மாமா அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போயிருப்பாரா? அதற்குச் சித்ரா சம்மதித்திருப்பாளா?

நாளை விடுதலையடைந்ததும் எங்கே செல்வது? - தஞ்சைக்கா, சென்னைக்கா?

எது எப்படியிருந்தாலும் முதலில் நாம் சென்னைக்குத் தான் செல்ல வேண்டும். அங்கே சித்ராவைப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/67&oldid=1379066" இலிருந்து மீள்விக்கப்பட்டது