பக்கம்:கண் திறக்குமா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

65

முடியாவிட்டாலும், சாந்தினியையாவது பார்க்கலாமல்லவா?

ஒருவேளை அவளும் கல்யாணம் கில்யாணம் செய்து கொண்டு, புக்ககம் கிக்ககம் போய் விட்டிருப்பாளோ, என்னமோ!

சீசீ, அப்படியெல்லாம் ஒன்றும் நடந்திராது. அவ்வாறு நடந்து கொள்பவளாயிருந்தால், 'என்னை மறவாதீர்!' என்று அன்று ஏன் அவ்வளவு உருக்கமுடன் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறாள்? நம்முடைய தாய்க்குத் தெரியாமல், தங்கைக்குத் தெரியாமல் - ஏன், தன்னுடைய தந்தைக்குக் கூடத் தெரியாமல் அடிக்கொரு தரம் ஆஸ்பத்திரிக்கு வந்து நம்மை ஏன் அவ்வளவு அக்கறையுடன் கவனித்திருக்கப் போகிறாள்?

இம்மாதிரியான எண்ணப் போராட்டங்களிடையே அன்றிரவு முழுவதும் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததும் 'வார்டர்' வந்தான்; பிரிவுபசாரத்துடன் சிறைக் கதவுகளைத் திறந்தான்; விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்தேன் - அடாடா! சிறை உலகத்துக்கும் வெளி உலகத்துக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? மண்ணிலும் விண்ணிலும், நீரிலும் காற்றிலுங்கூட அல்லவா நான் வித்தியாசத்தைக் கண்டேன்?

சென்னை வந்து சேர்ந்ததும் நேரே வீட்டைத் தேடி ஓடி வந்தேன் - வீடு பூட்டிக் கிடக்கவில்லை; திறந்துதான் இருந்தது.

ஆனால் வீட்டுக்குள் எனக்குத் தெரிந்த முகங்கள் எதுவும் இருக்கவில்லை ; எல்லாம் புத்தம் புது முகங்களாயிருந்தன.

ஒருகணம் அந்த வீட்டு வாயிலை உற்றுப் பார்த்தேனோ இல்லையோ, யாரோ ஓர் அம்மாள் உள்ளேயிருந்து ஓடோடியும் வந்து, 'இந்த வீட்டுக் கதவைச் சாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/68&oldid=1379070" இலிருந்து மீள்விக்கப்பட்டது