பக்கம்:கண் திறக்குமா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கண் திறக்குமா?

"நீங்க போயி என்னமோ படிச்சுக்கிட்டு இருந்தீங்களே, அந்த வக்கீல் ஐயா வீட்டிலே தான் வேலை செய்றேனுங்க!" என்றாள் அவள்.

வேறு யாராவது என் கோலத்தைப் பார்ப்பதற்கு முன்னால் சீக்கிரமாகப் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் "சரி, சௌக்கியமாயிருக்கிறாயோ, இல்லையோ?" என்றேன் நான்.

"உங்க புண்ணியத்திலே சௌக்கியமாத்தான் இருக்கேனுங்க! - ஆனா, அந்த வக்கீல் ஐயா இருக்காரே..." என்று மேலே ஏதோ சொல்வதற்கு வெட்கப்படுபவள் போல அவள் தன் உடம்பை இப்படியும் அப்படியுமாக நெளித்துக் கொண்டாள்.

எனக்குத் 'திக்'கென்றது. ஒரு வேளை....

"சீசீ, அப்படியொன்றும் இருக்காது' என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, "ம், அப்புறம்?" என்று அவளுடைய பேச்சை மீண்டும் ஆரம்பித்துக் கொடுத்தேன்.

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ, என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!ன்னு சொல்றாரு, சாமி" என்றாள் அவள்.

"இதென்ன வேடிக்கை! அவர் உன்னையா கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார்?"

"நீங்க ஒண்ணு! வேறே யாரையாச்சும் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாரு, சாமின்னா!"

"ஏனாம்?"

"இன்னும் கொஞ்ச நாளிலே தாலியறுத்தவங்களெல்லாம் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களாம்; அவங்களைப்போல நானும் கல்யாணம் பண்ணிக்கணுமாம் - அது எப்படி சாமி, நியாயமாகும்? ஒருத்தனுக்குப் போட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/71&oldid=1379092" இலிருந்து மீள்விக்கப்பட்டது