பக்கம்:கண் திறக்குமா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கண் திறக்குமா?

"என்னமோ போங்க, சாமி! - அதாலே அவங்க வீட்டு வேலையை விட்டுட்டாக்கூடத் தேவலைன்னு எனக்குத் தோணுது!" என்றாள் அவள்.

"ஏன் விடவேண்டும்? - அவர் பிடிக்காவிட்டாலும் அவருடைய மகளை உனக்கு ரொம்பப் பிடித்திருக்குமே!" என்றேன் நான்.

அவ்வளவுதான் - அவள் ஆரம்பித்துவிட்டாள்:

"அந்த அம்மா தங்கம்னா தங்கமாச்சுதுங்களே! நீங்க அம்மாவையும் தங்கச்சியையும் தவியாய்த் தவிக்க விட்டுப்பிட்டு ஜெயிலுக்குப் போனீங்கன்னு கேட்டதும், அது நம்ம வீட்டுக்கு விழுந்தடிச்சுக்கிட்டு ஓடியாந்துச்சி. பெரிய எசமானிக்கும் சின்ன எசமானிக்கும் தன்னாலே ஆனமட்டும் தைரியம் சொல்லித் தேத்துச்சி. பெரியம்மா உசிரை விடுற சமயத்திலேகூட அது கிட்டவே இருந்திச்சி. அப்புறங்கூட அது தினந்தினம் சின்னம்மாகிட்ட வந்து என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கும் - அதை எல்லாம் நான் காது கொடுத்துக் கேட்டுக்கிறதில்லே - உங்க மாமா இங்கே வந்து இருந்திச்சே, அது உங்களுக்குத் தெரியுமில்லே? - அவருதான் நம்ம வீட்டை யாரோ ஒரு அய்யருக்கு விட்டுப்பிட்டுச் சின்னம்மாவைத் தன்னோடே கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு!"

"சரி, சின்னம்மா சௌக்கியத்தைப் பற்றி நீ வக்கீல் ஐயா மகளை விசாரிப்பதுண்டா?"

"விசாரிக்காமக்கூட இருப்பேனுங்களா? அந்த அம்மாவைப் பார்க்கிறப்போல்லாம், 'இன்னிக்குச் சின்னம்மா கிட்டேயிருந்து ஏதாச்சும் காயிதம் வந்ததுங்களா?"ன்னு கேட்பேன். அந்த அம்மாவும் சந்தோசத்தோடு, 'வந்தது, சௌக்கியம் தானாம்!'னு சொல்லுவாங்க. ஆனா, இப்போ என்னமோ தெரியலை - ரெண்டு வாரமா நான் அப்படிக் கேட்கிறப்போல்லாம் அந்த அம்மா மூஞ்சியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/73&oldid=1379101" இலிருந்து மீள்விக்கப்பட்டது