பக்கம்:கண் திறக்குமா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கண் திறக்குமா?

"உங்களைப் போன்றவர்களுக்குத்தான் அந்தப் பணத்தைத் தவிர வேறு ஒன்றுமே வேண்டியதில்லையே?"

"உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்! - என்னைப் போன்றவர்களுக்கும் எல்லாவற்றிலும் ஆசையுண்டு ஐயா, ஆசையுண்டு, ஆனால் அதற்காக எந்தவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்கத்தான் நாங்கள் தயாராயிருப்ப தில்லை!"

"சரி, இந்த நாட்டு மக்கள் அனைவரும் உங்களைப் போலவே சகல சௌகரியங்களுடனும் வாழ வேண்டுமென்றாவது நீங்கள் விரும்புகிறீர்களல்லவா?"

"மன்னிக்க வேண்டும்; அவ்வளவு தூரம் என் புத்தி இன்னும் கெட்டுப் போகவில்லை - எல்லோரும் என்னைப் போலவே வாழ்வதென்று ஏற்பட்டுவிட்டால், அப்புறம் இந்த உலகத்தில் எங்களை யார் மதிப்பார்கள்? எங்கள் வீட்டைக் காக்க நாயைத் தவிர வேறு எவன் கிடைப்பான்? காரை வேண்டுமானால் நாங்களே ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்; ஓட்டிக்கொண்டும் செல்லலாம், ஆனால் அதிலிருந்து இறங்கக் கதவைத் திறந்து விடுவது யார்? கை கட்டி நிற்பது யார்? கழுவித் துடைப்பது யார்? ஏவிய வேலையைச் செய்வதற்கும், எச்சில் இலையை எடுத்துப் போடுவதற்கும் யாரைத் தேடுவது?"

"உங்களைப்போன்ற ஒரு சிலர் மதிப்பு, மரியாதையுடன் வாழவேண்டுமென்பதற்காக ஏழைகள் என்றும் ஏழைகளாகவே இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைப்பது என்ன நியாயம்?"

"நியாயமாவது, அநியாயமாவது! மனைவி தன்னை மதிக்க வேண்டுமென்று கணவன் எதிர்பார்க்கிறான்; மகன் தன்னை மதிக்க வேண்டுமென்று தகப்பன் எதிர்பார்க்கிறான்; தம்பி தன்னை மதிக்க வேண்டுமென்று அண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/79&oldid=1379167" இலிருந்து மீள்விக்கப்பட்டது