பக்கம்:கண் திறக்குமா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கண் திறக்குமா?

வெற்றி அடைந்தாலும் அடையலாம் - அதையெல்லாம் இப்போது நாம் ஏன் அலசிப் பார்க்க வேண்டும்? - என்னவோ, என்னைப்போன்றவர்கள் ‘அகில இந்தியக் கீர்த்தி’ அடைவதற்கு அவன் ஒரு குறுக்கு வழியைக் காட்டுகிறான்; அதை நான் பயன்படுத்திக் கொண்டு விட்டேன் - அவ்வளவுதான் விஷயம்!”

“அகில இந்தியக் கீர்த்தி அடைவதற்கு இதில் என்ன இருக்கிறது?”

“விஷயம் தெரியாத மனிதனாயிருக்கிறாயே? - இந்தா, இந்தப் பத்திரிகையைப் பார்!” என்று சொல்லி அங்கிருந்த ஒரு பத்திரிகையை எடுத்து எனக்கு முன்னால் விட்டெறிந்தார் பாரிஸ்டர். அந்தப் பத்திரிகையில் அவர் தேசநலனைக் கருதி, லட்சக்கணக்கில் வரும்படி வரும் வக்கீல் தொழிலைத் துச்சமெனக் கருதி விட்டது பற்றிய மகத்தான செய்தியும், அதற்காக ஆசிரியர் பெருமான் எழுதியிருந்த மாபெரும் தலையங்கமும் வெளியாகியிருந்தன. மேலெழுந்த வாரியாக அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை நோக்கி, “பார்த்தீர்களா, சில சமயம் நமக்கு நூற்றுக் கணக்கில்கூட வரும்படி வராவிட்டாலும் பத்திரிகையில் லட்சக்கணக்கில் வரும்படி வரும் அதிசயத்தை!” என்றார் பரந்தாமன்.

“பார்த்தேன், பார்த்தேன்!” என்றேன் நான்.

இந்தத் தலையங்கம் எழுதிய ஆசிரியர் இருக்கிறாரே, அவர் மறுநாள் என்னைப் பார்க்க வந்தார். ‘தங்களைப் பற்றித் தலையங்கம் எழுதியிருந்தேனே, பார்த்தீர்களா?’ என்று கேட்டார். ‘ஆஹா, பார்த்தேன்; பார்த்துப் பரவச மடைந்தேன்!’ என்று சொல்லி நான் அவரை அனுப்பி வைத்தேன்! அதற்குப் பிறகு இரண்டுநாள் கழித்துத் தம்முடைய பெண்ணுக்குக் கல்யாணம் என்று ‘அழைப்பிதழ்’ அனுப்பினார். நானும் சந்தர்ப்பத்தைக் கைவிடாமலும் நன்றியை மறவாமலும் ஆயிரம் ரூபாயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/81&oldid=1378710" இலிருந்து மீள்விக்கப்பட்டது