பக்கம்:கண் திறக்குமா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

81

முன்னால் நிற்கிறாயே, உன்னை என்ன செய்தால் தேவலை!”என்று சொல்லி நிறுத்தினார் அவர்.

எனக்குத் தலையை வலித்தது; ஒன்றும் புரியாமல் மூளை குழம்பி விட்டதுபோன்ற உணர்ச்சிக்கு நான் அப்போது ஆளானேன். நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் கையில் ‘ஸ்டெதஸ்கோப்’புடன் சாந்தினி உள்ளே நுழைந்தாள். என்னைக் கண்டதும் அவளுடைய கால்கள் மேலே செல்லவில்லை; கண்ணின் இமைகளும் அப்படி இப்படி அசையவில்லை - நின்றது நின்றபடி நின்றாள். அதற்குள் பரந்தாமனார் குறுக்கிட்டு, என்ன அம்மா, இந்தப் பேர் வழியை யார் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டார்.

அவருடைய கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் அவள் என்னை ஒரு கணம் உற்று நோக்கினாள்; மறுகணம் வியப்புடனும், விஷமத்தனத்துடனும் விரிந்த இதழ்களை அவள் ஏனோ குவித்துக்கொள்ள முயன்றாள்.

பரந்தாமனார் விடவில்லை: “என்ன, தெரியவே இல்லையா?” என்றார் மறுபடியும்.

“தெரியவில்லையே, அப்பா!” என்றாள் அவள் குறுநகையுடன்.

“இவன்தான் செல்வம்; மூன்று வருடங்களுக்கு முன்னால் என்னிடம்...”

“ஓஹோ, இப்பொழுது தெரிகிறது; சிறைக்குக்கூட...”

“ஆமாம் ஆமாம், அவனேதான்! - இன்று விடுதலையாகி வந்திருக்கிறான்!”

“அடபாவமே, இவருடைய தங்கைகூட இப்பொழுது இங்கே இல்லை போலிருக்கிறதே? - இரவு இவர் எங்கே தங்குவார்?” என்று கேட்டுவிட்டு, அப்பாவுக்குத் தெரியாமல் தன் பார்வையை அவள் என்மேல் செலுத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/84&oldid=1378723" இலிருந்து மீள்விக்கப்பட்டது