பக்கம்:கதாநாயகி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 93


நானும் அனுபவிக்கிறேன்... சுழல் என்றைக்கு அந்தப் பாவியைச் சிக்கவைக்கப் போகிறதோ, தெரியவில்லை!. அம்பலத்தரசன் இப்போது தன்னைப் பற்றியும் ஊர்வசியைப் பற்றியும் மங்கையர்க்கரசியைப் பற்றியும் நீதிதேவன் இருப்பிடத்தில் அமர்ந்து எண்ணிப்பார்த்தான். ஊர்வசி மட்டுமே நிரபராதியாக அவனுள் தோற்றம் கொடுத்ததை அவனது உள்ளுணர்வு எடுத்துக்காட்டியது. 'வாழ்க்கை ஒர் உயிர் மரணப் போராட்டமேதான்!. பிறவிச் சோதனையை வெல்ல, தியாகப் பண்பும் சுயதலமற்ற தன்மையும் ஈரச்சித்தமும் வேண்டும். இத்தகைய குணச்சீர்கள் மனித மனத்துக்குக் கிட்டிவிட்டால், அப்பால், வாழ்க்கை ஒர் ஆனந்தமயமான ஆறுதலாகவே அமையும். ஊர்வசியின் எதிர்காலத்தைப் பேண நான் எடுத்துள்ள இப்புதுப் பிறவி எனக்கு கை கொடுக்கும்; என் மனமே எனக்கு வழிகாட்டியாக அமையும். என் மனத்துக்கு தானும் வழிகாட்டியாக அமையமுடியும் அவன் போர்த்துக்கீசிய மாதாகோயில் 'எனக்குக் கோழி பிரியாணி பிடிக்கு மென்று யார் சொல்லியிருப்பார்கள் ஊர்வசியிடம்?. ஆமாம், மங்கையர்க் கரசிதான் சொல்லியிருக்கக்கூடும். தனக்குத்தானே. முறுவல் பூத்தவனாக நடந்தான் அம்பலத்தரசன். வானக் கப்பல் சிவப்புப் புள்ளியாக நட்சத்திரங்களுக்கு மத்தியில் பறந்து சென்றது. . ஆங்கிலச் செய்திகள் படிக்கப்பட்ட நேரத்தில், அவன் ஊர்வசியின் குடிவீட்டை அடைந்தான். - வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திருந்தாள் அவள் "வாங்க அத்தான்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/103&oldid=1284045" இலிருந்து மீள்விக்கப்பட்டது