பக்கம்:கதாநாயகி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்❖121


பாதிச் சிகரெட் நழுவ, தலையைப் பதற்றத்துடன் நிமிர்த்தலானான்.

"நீங்க இரண்டு பேரும் தயவு செஞ்சு திகைச்சிட வேண்டாம். உங்க இரண்டு பேரையும் இங்கே ஒன்றாய்க் கண்ட குதூகலத்திலேதான். நான் இப்போது இப்படி என்னை மறந்து சிரிச்சேன்!" என்று படிமானத்தைக் குரலில் எடுத்துக் கூறினாள் ஊர்வசி.

அவர்கள் இருவருக்கும் போன உயிர் அப்போதுதான் திரும்பியது போல், நல்மூச்சு வந்தது.

"க்ரிட்டிக் ஸார், நீங்க எங்க வீட்டுக்கு இப்போது சாப்பாட்டுக்கு வரவேணும்! வில்லன் ஸார், நீங்களும் எங்க வீட்டு விருந்துக்கு வரவேணும்! அவங்க விமர்சனம் எழுதினவங்க. நீங்க எனக்கு வில்லனாய் நடிச்சவங்க!...." அம்பலத்தரசன் மீதிருந்த ஒரக் கண்பார்வையை நயமுடன் திருப்பிப் பூமிநாதனை உன்னிப்பாகப் பார்த்துச் சொன்னாள் அவள்.

"விருந்துக்கு வராமல் இருக்க முடியுமா? பேஷாக வருகிறேன்!" என்று உரைத்தான் அம்பலத்தரசன்.

ஆனால், பூமிநாதனிடமிருந்து யாதொரு பதிலும் கிளம்பவில்லை.

"ஐயா, நீங்க...?" தூண்டினாள் ஊர்வசி.

"வருகிறேனே!..." என்று தடுமாற்றத்துடன் பூமிநாதன் சொன்னான். கைக்குட்டையைக் கொய்து முகத்தைத் துடைத்தான். புதிய மீசை பத்திரமாகவே இருந்தது!... துடைக்கத் துடைக்க இப்படி வேர்வை ஆறாகப் பெருகி வழிகிறதே?

கீழத்தளத்துக் கடிகாரம் பதினொன்று அடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/131&oldid=1307751" இலிருந்து மீள்விக்கப்பட்டது