பக்கம்:கதாநாயகி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ❖ கதாநாயகி


இப்போது டெலிஃபோன் மணி அடித்தது.

அம்பலத்தரசன் எடுத்தான். "ஹலோ... எஸ்... யார் நீங்களா? உங்க பையனுங்களா? இருக்காரே?" என்றான். "மிஸ்டர் பூமிநாதன், உங்களை உங்க அப்பா அழைக்கிறாங்க. நேற்று ராத்திரி கூட உங்களை விசாரிச்சாங்க;சொன்னேனல்லவா?... உங்களை பிரிஞ்சு உங்க அப்பா ஒரு செகண்ட்கூட இருக்கமாட்டாங்க போல...ஊம்...பேசுங்க!"

பூமிநாதன் பேசினான். "என்ன, நான் உடனே வரணுமா? சரிங்க!" என்று சொல்லி 'ரிஸீவரை' அதற்குண்டான இடத்தில் பொருத்தினான்.

"ஊர்வசி, நான் எங்க பங்களா வரை போயிட்டுத் திரும்பிடுகிறேன். கட்டாயம் உங்க விருந்திலே கலந்துக்கிடுவேன். பயப்படாதீங்க. உங்க அன்பை என்னாலே எப்போதும் மறக்க இயலாதுங்க," என்று சொல்லி எழுந்தான், பூமிநாதன்.

ஊர்வசியின் சிவந்த முகம் கறுத்து வந்தது. "நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நானே உங்க வீட்டுக்கு, மன்னிச்சிடுங்க, உங்க பங்களாவுக்கு வந்து உங்களைச் சந்திக்க வேணும்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்!... நல்ல வேளையாய், நீங்களே வழி மறிச்சுத் தரிசனம் கொடுத்து நீங்க இங்கே இருந்திட்டீங்க. நீங்கதான் இன்றைக்கு எங்க வீட்டின் பிரதம விருந்தாளி. வாங்க. அரைமணிக்குள்ளே உங்களை அனுப்பி வைச்சுப்பிடுறேன்!" என்று வற்புறுத்தினாள் அவள். வெள்ளைக்கல் மூக்குத்தி பளபளத்தது. "எங்க அப்பா இருந்திருந்தால் என்னோட கலைத்தொண்டைக் கண்டு இந்நேரம் ஒரு பெரிய டின்னருக்கே அரேஞ் பண்ணியிருப்பார். அவர் காலம் முடிஞ்சு பல காலமாயிடுச்சு. எங்க சொத்து பத்து, நிலம் நீச்சைக் கொண்டு என்னை எங்கம்மா காப்பாத்துறாங்க. ஏதோ, இந்த ஏழைவீட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/132&oldid=1310126" இலிருந்து மீள்விக்கப்பட்டது