பக்கம்:கதாநாயகி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ்.ஆறுமுகம் ❖ 123


எள்ளுருண்டையை உங்களைப் போல உள்ள பெரிய இடத்துப் பிள்ளைங்க பெரிய மனுசங்க, பெரிய மனசு பண்ணிச் சாப்பிட்டால் அதுதான் எனக்குப் பரம திருப்திதரும்..." என்று தொடர் சேர்த்து நிறைத்தாள் ஊர்வசி,

"ஆமாம், மிஸ்டர் பூமிநாதன்!. இவ்வளவு தூரம் மனம் விட்டுச் சொல்றபோது, நீங்க வந்து சாப்பிட்டுப் போறதுதான் பண்பாக இருக்கும்!" என்றான் அம்பலத்தரசன்.

"ஒ கே!" என்று ஆமோதிப்புக் கொடுத்தான் பூமிநாதன். மீசை பத்திரமாக இருக்கிறாவென்று நலியாமல் தடவிப் பார்த்துக் கொண்டான். பிறகு வலது பக்கத்துச் சட்டைப் பையைக் குனிந்து பார்த்து, அத்துடன் திருப்தியுறாமல் தடவியும் பார்த்தான். அந்த இடத்தில் அவன் இருதயம் இருக்க நியாயமில்லை!

அழும்பு பண்ணும் மழலையாக, மீண்டும் வீரிட்டது தொலைபேசி. ஆமாம், தொலைவிலிருந்துதான் இப்போது பேசியது.

இடது கையை நீட்டினான் அம்பலத்தரசன். "அம்பலத்தரசன் பேசுறேன்! யார் கருணாநிதியா? எந்தக் கருணாநிதி? ஒஹோ, நீயா? சொல்லு! என்ன, அப்படியா? ஊம், உன் இரும்புப் பெட்டியும் என் இரும்பு நெஞ்சமும் மோதட்டும், நான் ரெடி! இன்றாவது உனக்கு மீசை துடித்ததே? பேஷ்! ஒரு கையென்ன, இரண்டு கையாலேயும் என்னைப் பார்த்துக் கொள். பாவம், உனக்குத் திடுதிப்னு கண்ணும் ரிப்பேராகிடுச்சோ? ஒர் அபலைப் பெண்ணைப் பலவந்தப் படுத்திக் கற்பழிச்சு, அந்தத் துன்பம் தாங்காது, அவள் ஏழை அப்பன் உன்கிட்டே வந்து தன் மகளை ஏற்றிக்கிடும்படி கெஞ்சிக் கூத்தாடியும், நீ மனசைக் கல்லாக்கிக்கிட்டு, அவங்களைத் துரத்தியடிக்க, அந்த அபவாதத்தின் நரக வேதனையிலே அந்தப் பெண்ணும் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/133&oldid=1333017" இலிருந்து மீள்விக்கப்பட்டது