பக்கம்:கதாநாயகி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130❖கதாநாயகி


பூமிநாதன் தலையை உயர்த்தி ஊர்வசியைப் பார்த்தான்.

ஊர்வசி தலையைத் தாழ்த்திப் பூமிநாதனைப் பார்த்தாள்.

பூமிநாதனின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் வழிந்தோடிக் கொண்டேயிருந்தது! அடுத்த கைந்நொடிப் பொழுதில், அவன் இருக்கையை விட்டு எழுந்தான். "ஐயோ! ஊர்வசி!..." என்று கதறிக்கொண்டு ஒடி ஊர்வசியின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்! "நான் பாவி... துரோகி... சண்டாளன்! ஐயோ! தெய்வமே!..." என்று கூக்குரலிட்டு மண்டையில் அடித்துக் கொண்டு, மண்டை முடியைப் பிய்த்துக் கொண்டு ஓலம் பரப்பினான், பூமிநாதன்.

தீக் கணப்பைத் தீண்டியவனை ஒத்துத் துடித்தான் அம்பலத்தரசன். ஊர்வசியை நோக்கினான்.

ஊர்வசி வைராக்கியச் சிலையாக அப்படியே நின்றாள்!... தன் பாதங்களிலே தலைபதித்துக் கண்ணீரைத் தாரை வார்த்தவாறு இருந்த பூமிநாதனைக் கால்களில் தாங்கிக்கொண்டு அப்படியே மோகினிச்சிலையாக மெளனம் கொண்டு நின்றாள்!...

பூமிநாதன் கைகுவித்து ஊர்வசியைக் கும்பிட்டான். "நான் மிருகமாகி விட்டேன் ஊர்வசி. மிருகமாகிவிட்டேன்! உன்னை நாடகத்திலே கற்பழிக்கிற கட்டத்திலே, உன்னை மேனி தொட்டு அணைச்ச அந்த இன்ப ஸ்பரிசம் என்னைப் பைத்திய மாக்கிடுச்சு!.. அந்த வெறியிலே, நான் மிருகமாகிவிட்டேன்!... எனக்கு உன் மன்னிப்போ, என் மனச்சாட்சியோட மன்னிப்போ, அல்லது ஆண்டவனோட மன்னிப்போ கட்டாயம் கிடைக்க முடியாதுங்கிறதும் எனக்குப் புரியாமல் இல்லை! அமரர் தொழும் பூவை அநியாயமாய்க் கசக்கி நுகர்ந்து வீசிவிட்டேன்!... குற்றவாளி இதோ, உன்முன் மண்டியிட்டு இருக்கேன்...! எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு!... நானே உன்னைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/140&oldid=1307466" இலிருந்து மீள்விக்கப்பட்டது