பக்கம்:கதாநாயகி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கதாநாயகி


பூமிநாதன் பேய்பற்றியவன் போல தலைதெறிக்க ஒடத் தலைப்பட்டான்!. பூமிநாதனின் அந்தப் பாவப்பட்ட தாலி, விதியாகச் சிரிக்கிறதா?... "ஊர்வசி..." நேசம் தேம்பியது. 3% "மகளே!... பாசம் கதறியது. நெற்றிப் பொட்டு, அன்புக் காட்டிப் புன்னகை பூத்துக் கொண்டிருந்தது!.. கண்ணிர் பொட்டுகள், அன்பு கூட்டிச் சிதறிக் கொண்டிருந்தன. அதே நேரத்தில்: பூர் தண்டு மாரியம்மன் சந்நிதியில் பார்வையாளர் கும்பல் கூடியது. - உச்சி வெயில் எரிந்தது. - மண்ணில் சாய்ந்து கிடந்தான் பூமிநாதன். அவனுக்கு வாயிலும் மூக்கிலும் ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது! விழுந்துகிடந்த அவனைப் பார்க்க கூட்டம் கூடியது. தன் கண் முன்னே நடந்ததையெல்லாம் சலனமே இல்லாது அர்த்தப்புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மன்; பூர் தண்டுமாரியம்மன்! వá వడ ఎడ تمثنډ مُگډ ه סגל אל אל

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/144&oldid=1284077" இலிருந்து மீள்விக்கப்பட்டது