பக்கம்:கதாநாயகி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10❖ கதாநாயகி


குறைவாக இருந்தாலும், ரொம்பவும் கச்சிதமாகச் செய்துவிட்டீங்க, பூமிநாதன்” என்று தன் பாராட்டுதலைத் தெரிவித்தான் அம்பலத்தரசன்.

“ரொம்ப தாங்க்ஸ், ஸார். உங்க பாராட்டும் தூண்டுதலும்தான் எனக்கு எப்போதுமே உற்சாகம் கொடுத்து வருது. நீங்க ரெண்டு வரி எழுதிட்டா, அதோட பலனே பிரமாதமாய் அமைஞ்சிடும். இந்த மட்டுக்கும் எனக்கு நிம்மதிதான்!”

“நீங்க கற்பழிச்ச அந்தக்கட்டத்திலே ரொம்பவும் தத்ரூபமாய் நடிச்சிட்டீங்க. உங்க நடிப்பு ரொம்பவும் ரியலிஸ்டிக்காக இருந்துச்சு. ரெண்டுவரி என்ன, நாலு வரி உங்களைப் பத்தி எழுதியிருக்கேன். காலம்பற பேப்பரிலே படியுங்க. நீங்க இன்னும் சந்தோஷப்படுவீங்க!”

“அப்படியா? ரொம்ப நன்றிங்க, அம்பலத்தரசன்!” என்றார் பூமிநாதன்.

“நாடகத்திலே கதையம்சம் அழுத்தம் குறைஞ்சிருத்திச்சு. ஆனாலும், தொன்று தொட்டு வளர்ந்துக்கிட்டு வருகிற நாடகக் கலைக்கு உயிரும் ஊட்டமும் கொடுப்பதில் உங்க பங்கை நீங்களும் செய்திருக்கிறதுக்காக நானும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கத்தான் வேணும். நாடகக் கலை வளரவில்லைன்னு வழக்கமாய்க் குறை சொல்லும் ஒரு கோஷ்டிக்கு இந்த நாடகமும் கட்டாயம் ஒரு நல்ல தெளிவையும் ஒரு பயனுள்ள பலனையும் உண்டாக்குமென்கிறது என்னோட சொந்த அபிப்பிராயம்!” அம்பலத்தரசன்.

“அப்படியா?” மைனர் செயினை நெருடி விட்டுக் கொண்டான் பூமிநாதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/20&oldid=1308037" இலிருந்து மீள்விக்கப்பட்டது