பக்கம்:கதாநாயகி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12*கதாநாயகி


அம்பலத்தரசனுக்கு அப்பொழுதான் தன் நாதடுமாறி விட்ட தவறு புரிந்தது. தவற்றை உணர்ந்த சிந்தனையோடு, "ஆமாங்க. தா.... கத்திலே ஊர்வசியின் நிலை அப்படித்தானே ஆகிவிட்டது!....." என்று சமாளித்துக் கொண்டான். பிறகு, "ஊர்வசியின் நடிப்பைப் பத்திச் சொல்லணும் இல்லீங்களா? ரொம்பவும் அற்புதமாய் நடிச்சாங்க. நீங்க ஊர்வசியைக் கெடுக்க எத்தனம் செய்த போது, அந்தக் கண்டத்திலிருந்து தப்பிக்க அவங்க பட்டபாடும், பின்னாலே அந்தப் பழியிலிருந்து தப்ப வழியில்லாமல் கெடுக்கப்பட்டதை அறிஞ்சதும், அவங்க தன்னோட நிலைமையை எண்ணி மூச்சுவிடாமல் கண்ணீர் வடிச்சதும் ரொம்பவும் இயல்பாய் இருந்திச்சு!.... அந்தப் பயங்கரக் காட்சிகளைக் கண்டதும், எனக்கு உங்களைக் கொன்று போட்டுப்பிட வேணும்னு ஒரு கொடுமையான ஆத்திரம் கூட வந்திச்சு! அவ்வளவு தொலைவுக்கு என் மனசு சலனம் அடைஞ்சிடுச்சு!... ஒரு பெண்ணைக் கற்பழிக்கிறதும், ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறதும் எத்துனை பெரிய கொடுமை என்கிறதை நிதர்சனமாய் என்னாலே காணமுடிஞ்சது!...."

"நல்ல வேளை! நான் பயந்து விட்டேன். சற்று நேரத்துக்குள்ளே!.. வாஸ்தவமாகவே, எனக்கு அந்தக் கட்டத்தில் நடிக்க மனசில்லே!கலையார்வத்தினாலேதான், ஊர்வசியைக் கற்பழிக்கும் பாகத்தை ஏற்க வேண்டியிருந்துச்சு!” பூமிநாதனின் கண்கடையில் ஈரம் இருந்தது.

“நவ்ல உள்ளம் படைச்ச உங்களுக்கு ஒரு சோதனை போலத்தான் அந்த நிகழ்ச்சி அந்த நடிப்பு அமைந்திருச்சு!... கலையம்சத்தைப் பொறுத்த மட்டிலே, உங்களுக்கு அந்நடிப்பு ஒரு வெற்றியாகவே அமைந்திடுச்சுங்க. மிஸ்டர் பூமிநாதன்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/22&oldid=1319070" இலிருந்து மீள்விக்கப்பட்டது