பக்கம்:கதாநாயகி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18* கதாநாயகி


பெருமூச்சோடு 'ஆகட்டும்' எனச்சொல்லி, அவளை நன்றாகப் பார்வையிட்டான். அவள் அங்கு வந்தபோது, அவள் முகம் காட்டிய அந்தச் சலனம் இப்போது மறைந்து விட்டிருக்கக் கண்டான் அவன். அந்நிலை அவனுக்கு ஓரளவு ஆறுதலாகவும் இருந்தது. அமைதியையும் ஓரளவுக்கு... அக்காட்சி கொடுத்திருக்கவும் கூடுமே!

“நீங்க சாப்பீட்டீங்களா, என்ன?" என்று விசாரித்தாள் ஊர்வசி. பசுங்கிளியின் செங்கனி வாய்ச் சிவப்பு அவளுக்குச் சொந்தமான இதழ்களில் ஒட்டியிருந்தது. அச் சிவப்பில், மதுரமான முறுவல் கீற்றொன்று கோடுகிறுக்கிக் கிடந்தது.

'அவளுக்கே உரித்தான மோகனச் சிரிப்பாயிற்றே இது!' அவளைப் போல அவனுக்கு அத்துணை லாகவமாகப் புன்னகை செய்யத் தெரியாது. ஆனாலும் அவன் முறுவல் கோலம் ஏந்தினான். இயல்பாகவே அழகு பூத்திருந்த அவனது உதடுகளுக்கு அந்தப் புன்னகை மேலும் ஓர் அழகுக் கோலமாகவே அமைந்தது. "நான் உங்ககிட்டே கேட்க வேண்டிய கேள்வியை இப்போது நீங்க என்கிட்டே கேட்கிறீங்க!.... நான் நாடகம் முடிஞ்சு வருறப்பவே பாலும் பழமும் பிராட்வேயில் சாப்பிட்டிட்டேன். உங்களுக்கு இப்போது தேவை எதுவென்று சொல்லுங்க", என்று கேட்டான். விருந்தோம்பல் பண்பு ஓங்கியது.

"எனக்கு இப்போ தேவையானது உங்க அன்புதான்."

"அந்த அன்பு உங்களைப் பொறுத்தமட்டிலே எப்போதுமே உங்களுக்குக் கிடைக்கும்."

"ரொம்ப நன்றிங்க. உங்க அன்பை இப்போதுதானா நான் அறிஞ்சிருக்கேன்?...."

சரி, இப்போ உங்களுக்குப் பாலும் பழமும் வாங்கி வருகிறேன்” என்று சொல்லி, ஃபிளாஸ்கை எடுத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/28&oldid=1319016" இலிருந்து மீள்விக்கப்பட்டது