பக்கம்:கதாநாயகி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

காந்தியடிகளின் சத்தியச் சோதனை அம்பலத்தரசனின் நெஞ்சில் கோயில் கொண்டிருந்தது.

  நினைவின் ஒர் ஏட்டைப் புரட்டிப் பார்த்தான் அவன். 
  இடம் :
  மண்ணடியிலிருந்த தாஜ் ஹோட்டல். 
  காலம்: விடிகாலை, மணி நாலு, நிமிஷம் ஏழு, வினாடி இரண்டு.
  வாசகம் இது: 
 "கடத்திச் செல்லப்பட்ட பெண்கள் மூர்க்க மனிதர்களின் மிருகத்தனமான காமப்பேய்க்கு இரையானார்களென்று அவர்களை இழிவு படுத்துவது மனிதத்தன்மையல்ல. தங்களை அறியாமல் கற்பழிக்கப்பட்டது அவர்களின் குற்றமல்ல!...."
  அது சத்தியச் சோதனை! -

உருவாகி விட்டிருந்த சத்திய சோதனையில் தான் வெற்றி கொண்டு விட்டதாகவே அவன் உள்ளுற எண்ணினான். அவ்வெண்ணத்தின் பிரதிபலிப்பாக அவனுள் முகிழ்த்த மகிழ்ச்சியின் சிலிர்ப்பு அவன் மேனியை ஆட்கொண்டிருந்தது. அவன் மனச்சான்று ஆறுதுல் பேணி முறுவல் பூத்தது.

  சூடான சாயா மேஜையில் காத்திருந்தது. ஆவி பறந்தது, வாசம் பிரிந்தது. l
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/34&oldid=1307922" இலிருந்து மீள்விக்கப்பட்டது