பக்கம்:கதாநாயகி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

25

________________


அதில் ஒரு வாய் சப்பிப் பருகினான் அம்பலத்தரசன். அந்தத் தேநீரின் சூடும் சுவையும் அவனது அடி மனத்தைத் தொட்டிருக்க வேண்டும்.

  சிகரெட் பற்றி எரிந்தது.
  அவன் மனமோ மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. 'என்னுடைய நல்ல முடிவைக் கேட்டதும், இப்படித்தான் ஊர்வசியின் உள்ளமும் அமைதியுடன் குளிர்த்திருக்க வேண்டும். அனுதாபத்துக்குரிய பெண் அல்லள் அவள்; அதிசயத்துக்குரிய பெண் அவள்! என்வரை ஏன், அவள் வரையும் கூட, என்னுடைய மனிதத்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டேன், மெய்யாகவே, ஊர்வசி ஒரு புரட்சிப் பெண்ணே தான்!” பன்னிரெண்டு மணிக்கு மேல் தொடர்ந்த இத்தகைய சிந்தனைகள், புதுப்புது உருவத்தோடும் புதுப்புது உள்ளத்தோடும் அவன் மனத்தில் ஒளி வீசி, ஒளிகாட்டிக் கொண்டேயிருந்தன. அவளை என்னென்னவோ கேட்க வேண்டுமென்று 'பூ' அலுவலகத்திலிருந்து திரும்பி, தம்புச் செட்டித் தெருவில் நடந்து, அங்கிருந்து மறுகி, அரண்மனைக்காரத் தெருவில் அடிவைத்து, மீண்டும் மடங்கி, அந்தப் பிள்ளையாரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, முத்துமாரிச் செட்டித் தெருவில் வந்த சமயம் நினைத்திருந்தானே? ஒரு கேள்வியையாவது அவனால் கேட்க முடிந்ததா? இல்லை! அதற்குகந்த சந்தர்ப்பத்தை அவள் கொடுத்தால்தானே?
  ஊர்வசியைப் பற்றி எண்ணமிட்டான். அவ்வெண்ணத்தை நினைப்பதற்கு மீண்டும் சக்தி தேவைப்பட்டதை உணர்ந்திருந்தவன் போல, அடுத்த தடவையாகச் சாயாவைக் குடித்தான். ஒரே மூச்சாகக் குடித்தான். இப்போது அவன் சந்தனைக்குப் புகைச் சூடும் தேவைப்பட்டது. ஊதினான், அவன் ஊதவில்லை சிகரெட்டைத்தான் ஊதினான். நெஞ்சின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/35&oldid=1307975" இலிருந்து மீள்விக்கப்பட்டது