பக்கம்:கதாநாயகி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*27


நாடகம் மாத்திரம் அமரர் லால்பகதூருக்கு அஞ்சலி செலுத்திய நிறைவுடன் நடந்தது. அந்நாடகம் ஆரம்பமாவதற்கு முன்னம், அம்பலத்தரசனை க்ரீன்ரூமுக்கு அழைத்துச் சென்று அவனை அந்நாடக உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நாடகப் பொறுப்பாளர் பூபதி.

பெண்களும் ஆண்களும் ஏழெட்டுப் பேர்கள் பழக்கப் படுத்தப்பட்டார்கள்.

ஆனால், ஊர்வசிதான் அவன் நெஞ்சில் நின்றாள் நினைவில் நின்றாள்.

உலகாளும் மாதாவாக அன்பின் அருள்பாலிக்கும் தெய்வமாக 'வேஷம்' புனைந்திருந்தாள் ஊர்வசி. கதாநாயகனின் தந்தை பூஜை செய்வதற்காக, அவள் இவ்வாறு லோகத்தாயாகத் தோன்றினாள். மூன்று 'சீன் கழித்து', இவளே கதைக்கு நாயகி. ஆனால் அந்தத் தெய்வவடிவம் அவனுள் ஒரு பக்தியுணர்வையே உண்டுபண்ணியது. பிறந்த பச்சைக் குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை அவள் முகம் காட்டியது. கயல் விழிகளிலே ஒரு கனிவு, கனி இதழ்களிலே ஒரு பரிவு. செழித்த மார்பகத்தில் கச்சை. அவள் பாங்கு சேரச் சிரித்து வணங்கினாள். அவளுக்கென்று அப்படி ஒரு சிரிப்பா? அந்தச் சிரார் சிரிப்பை நெஞ்சில் வாங்கிக்கொண்ட அம்பலத்தரசன், இமைப் பொழுதிற்குத் தன்னையே மறந்துவிட்டான். 'வணக்கம்' தெரிவிக்க சில வினாடிப் பொழுது கழித்துத்தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.

"உங்களைச் சந்தித்ததிலே எனக்கு ரொம்பவும் சந்தோஷம் ஐயா!" என்றாள் அவள். "உங்க விமர்சனங்களை நான் தவறாது படிப்பேனாக்கும்!” என்றாள்.

அவள் குறித்த பாராட்டுரை எதுவும் அவன் இதயத்தில் பதியவில்லை . ஆனால் அவளது தூய எழில் வடிவம் ஆதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/37&oldid=1319079" இலிருந்து மீள்விக்கப்பட்டது