பக்கம்:கதாநாயகி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ❖ கதாநாயகி


ஐயப்பாட்டோடு அவர் பார்வை இருந்ததை அம்பலத்தரசன் ஊகம் செய்துகொள்ளத் தவறவில்லை.

"ராத்திரி நாடகத்திலே நடிச்ச பெண்தானே இது?" என்று கேட்டார் குஞ்சிதபாதம்.

"ஆமாங்க, அந்தப் பெண்ணேதான். எனக்குச் சொந்தம். முறைமைக்காரப் பெண்ணுங்கூட," என்றான் அம்பலத்தரசன். வீட்டுக்காரர் உண்டாக்கிய அதிர்ச்சி இன்னமும் அப்படியே இருந்தது.

"ஒஹோ, உங்க அம்மா ஊரிலேயிருந்து லெட்டர் போட்டிருந்ததாகச் சொன்னீங்களே, அது இந்தப் பொண்ணைப் பத்தித்தானா ஸார்?"

"ஆமாங்க!"

கேள்வி கேட்ட புண்ணியவானே, ஒரு பதிலுக்கும் 'கோடி’காட்டிவிடவே, அம்பலத்தரசன் மேற்கொண்டு விடை சொல்லச் சிரமப்படவில்லை.

"இதுக்குப் பேர்?"

"இருக்குங்க, ஊர்வசின்னு பேர்"

"சுந்தரியின்னு சொன்னாங்களே”

"அது நாடகத்திலே வச்ச பேர்."

"பாவம், இத்தனை நல்ல பெண்ணைக் கெடுக்கவும் பாவிக்கு மனசு வந்துச்சே?" என்று வருந்தினார் குஞ்சிதபாதம்.

அவர் வருத்தம் அவனுக்குத் திகிலை ஊட்டியது. ஒர் அரைக் கணத்தில் அத்திகில் மறைந்தது. நாடகக் கதையிலேயே இன்னமும் அவர் நின்று கொண்டிருந்ததை அவன் அனுமானம் செய்துகொண்டான்.

"ஆமாங்க, பாவி ஆனபடியாலேதானுங்க, அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/44&oldid=1310098" இலிருந்து மீள்விக்கப்பட்டது