பக்கம்:கதாநாயகி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 35


அத்தனை பெரிய பாவத்தைச் செய்யத் துணிச்சல் வந்திச்சு; மனமும் வந்திருக்கு" பெரியவர் ஏனோ ஊர்வசியை விழுங்கிவிட எண்ணினார். அப் பார்வையை அவள் தாங்க வலுவிழந்தாள். அப்பார்வை அவளுக்கு வலியைத் தோற்றுவித்தது: "ஐயா, பேப்பரிலே பெரிய அதிசயமெல்லாம் இருக்குதுங்களே!" என்று அவரைத் திருப்பிவிட்டாள் ஊர்வசி. . கஞ்சப் பிரபுவானாலும், சிரிக்க மறக்கவில்லை வீட்டுக்காரர். பத்திரிகையைப் புரட்டினார். "ஐயா, வீட்டுக்கு எடுத்திட்டுப் போய்ப் பார்க்கலாமே! ஆபீஸ் விட்டு வந்ததும் நானே வந்து வாங்கிக்கிறேனே! கடையிலேயிருந்து, மத்தியானச் சாப்பாட்டுக்கு வரப்போ, வீட்டிலே கொண்டு வந்து பேப்பரைப் போட்டிடுங்க!" என்று அடைத்த பொறுப்பாகச் சொன்னான் அம்பலத்தரசன். குஞ்சிதபாதத்தோடு அன்றையச் செய்தித்தாளும் சென்றது. தான் சொன்ன தமாஷை எண்ணி அவள் சிரிக்க, அவள் சொன்ன நகைச்சுவையை அவன் ரசித்துச் சிரித்தான். போன மனிதர் திரும்பி வந்து, "இதுக்கும் உங்க தஞ்சாவூர் தானோ?" என்று கேட்டுவைத்தார். இப்போதும் அவர் தம் கேள்விக்குறியின் விடையையும் சொல்லாமல் சொல்லிவிடவே, இப்போதும் அவனுக்கு விடையிறுப்பதில் லவலேசமும் கஷ்டம் உண்டாகவில்லை. "ஆமாங்க!" என்றான். "நாங்க ஆவணியிலே தஞ்சாவூர் போவோம். அப்போது மறந்துவிடாமல் உங்களுக்குக் குடமிளகாய் ஒரு மூட்டை அனுப்பி வைச்சிடுறோமுங்க, ஐயா!" என்று சிரிக்காமல் கொள்ளாமல் செப்பினாள் ஊர்வசி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/45&oldid=1283997" இலிருந்து மீள்விக்கப்பட்டது