பக்கம்:கதாநாயகி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கதாநாயகி


"தங்கச்சிக்கு ஜோஸ்யம் கூடத்தெரியும் போல இருக்குது... நான் மனசிலே நெனைச்சதைக் கனகச்சித மாச் சொல்லிட்டுது!.... மறந்திடப்பிடாது!...." என்று தேன் குடித்த நரியாக நின்றார் குஞ்சிதயாதம். ஒரு மூட்டை குடமிளகாய் ஒசியில் கிட்டி விடுமென்று மனப்பால் குடித்தாரோ, என்னவோ? - "மறந்திட மாட்டோம்" என்று இருவரும் ஒரே குரலில் அவருக்கு அபயம் அளிக்கவே, பல்லெல்லாம் தெரியக் காட்டி, அதாவது, விழுந்து தொலைத்த மூன்று பற்கள் போக, மிகுந்திருந்த பற்களையெல்லாம் காட்டிச் சிரித்துவிட்டுத் தான் அவர் தமது குஞ்சார மேனியைக் கீழே இறக்கிக் கொண்டு மறையலானார்! அவள் கண்கள் சிரித்துப் பழகியவை. அவன் உதடுகள் சிரித்துப் பழகியவை. 米来淑 LTலசூரியன் ஏறுமுகம் காட்டினான். . மாடிக் கைப்பிடிச்சுவரருகே இருந்த தொட்டித் துளசியின் தளிர்களுக்கு இளம் கிரணங்கள் முத்தம் கொடுத்துப் பழகிக் கொண்டிருந்தன. - ரேடியோவின் வாயை அடைத்தாள் ஊர்வசி, "நம் திட்டத்தைப் பத்தி நீங்க சொல்லலே. ஆகையாலே நானே சொல்லிடுறேன். இப்போ நான் என்னோட ஜாகைக்குப் போகவேனும். என்னை ராத்திரி பூராவும் காணாமல், என்னைப் பெற்றத்தாய் தவிச்சுகிட்டிருப்பாங்க..." என்றாள் அவள். அவள் பேச்சில் கலவரம் இருந்தது. 薰 * ... • - * உனனை &a_ IᎦᎫ Ꮬ s9! Lí) L0 fT , êš fT Gððf fT f D (Gl)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/46&oldid=1283998" இலிருந்து மீள்விக்கப்பட்டது