பக்கம்:கதாநாயகி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கதாநாயகி


"என் அம்மாதான் இங்கு இருக்கும் வரை இம்மாதிரி டவலையும், சோப்புப் பெட்டியுைம் எடுத்துத் தருவாங்க! "இப்போது, அந்தப் பாக்கியம் எனக்கு விதிச்சிருக்குது இல்லீங்களா?"

  1. a , $5 ஊம்!

அவன் குளியலறைக்குப் போய்விட்டான். அவள் இரவு எழுதி முடித்திருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் உறையினின்றும் எடுத்து, மீண்டும் படித்துவிட்டு, உறைக்குள் திணித்து ஒட்டினாள். "அன்பர், திரு அம்பலத்தரசன் அவர்களுக்கு" என்று எழுதினாள். பெருமூச்சு வந்தது. அத்துடன் கண்ணிரும் வந்தது. ஒரு துளி உதிர்ந்து, அவள் எழுதிய உறையின் மீது எழுதிய எழுத்துக்களில் தெறித்தது. 'அன்பர் என்ற எழுத்துகள் மட்டும் லேசாகக் ாலைந்தன. அவ்வெழுத்துக்களில் மறுபடி விளம்பினாள். டைரியை மேஜையின் மையத்தில் வைத்தாள். அம்பலத்தரசனின் பார்வைக்குப் பளிச்சென்று படும் விதத்தில், எடுப்பாக வைத்தாள். மேஜை மீதிருந்த ஆடியைப்பார்த்தாள். கன்னங்களில் பதிந்திருந்த நகக்கீறல்கள் அவள் நெஞ்சில் விழுந்தன. பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டாள். அவள் நயனங்களில் ரத்தம் சுட்டி நின்றதைக் கண்ணாடி காட்டியது. காலடியோசை கேட்கவே, திரும்பினாள். துாய்மை மிளிர வந்தான் அம்பலத்தரசன். "இருங்க, துணிகளை எடுத்துத் தாரேன்." என்று சொல்லி அறையின் வட மூலையில் காணப்பட்ட திறந்திருந்த தோல்பெட்டியைத் தடவினாள். மேலாக இருந்த ஃபின்ட்லே வேஷ்டியையும் ஸில்க் ஜிப்பாவையும் எடுத்து நீட்டினாள். "இருங்க, இருங்க...!" என்று சொல்லிக் கொண்டே அடியில் கையைத் திணித்து எதையோ தேடினாள். புகைப்படமொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/48&oldid=1283999" இலிருந்து மீள்விக்கப்பட்டது