பக்கம்:கதாநாயகி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 41


"ஆபிசுக்குப் புறப்பட்டுப் போறதுக்குத் தோதாய் உங்களை அனுப்பி வைச்சிடுவேன். அந்தக் கடமையிலே எனக்கும் இனிமே பங்கு உண்டில்லையா?" "ஓ.கே.!" &# ஒரு விஷயம். இந்த லெட்டர் உங்களுக்கு. நான் எழுதினது. ஆபீஸிலே ஒய்வு கிடைக்கையில்... அதாகப்பட்டது, ஆபீஸ் வேலைக்கு குந்தகம் ஏற்படாத வகையிலே ஓய்வு கிடைக்கையிலே இதைப் படிச்சுப்பாருங்க... இதோ, பாருங்க, என் டைரி இது!... தானே வேண்டுமென்றேதான் இதை விட்டுட்டுப்போகப்போறேன்!... இதை உங்க விருப்பப்படி பார்க்கலாம்!...." டைரியை ஏதோ ஞாபகத்தோடு எடுத்துப் புரட்டினாள். பத்து ரூபாய்த் தாள்களைக் கொத்தாக எடுத்துக்கொண்டாள். "நாடகக் கூலி இது!" என்று சொல்லி நாட்குறிப்பை முன் வைத்த இடத்தில் வைத்தாள். தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்தாள் ஊர்வசி, "இந்தாங்க உங்க ரிஸ்ட் வாட்ச்" மணி ஆறு நாற்பது: {{ - • :* நல்லதுங்க! அறைக்கதவுகளையும் மாடி வழிக் கதைவையும் பூட்டிக்கொண்டு அவன் இறங்கினான். அதற்குள் படிதாண்டிக் கீழ்த்தள முகப்பை அடைந்து விட்டாள் ஊர்வசி. . . . பொருட்காட்சிசாலைப் பொருளைப் பார்ப்பது போல, பலப்பல கண்கள் ஊர்வசியை மொய்த்திருந்தன. அம்பலத்தரசன் படிகளைத் தாண்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அவன் அறையிலிருந்த டெலிஃபோன் 'கணகண' வென்று ஒலிக்கத் தலைப்பட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/51&oldid=1284002" இலிருந்து மீள்விக்கப்பட்டது