பக்கம்:கதாநாயகி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 43


கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லக் காணோம்: கல் பேசாதா? தெய்வத்திற்குப் பேச வாய் இல்லையோ? அவனுக்கு மேனி புல்லரித்தது; கண்கள் குளமாயின. செருமினாள் அவள். செக்கச்சிவந்திருந்த அதரங்கள் துடிதுடிக்கச் செருமினாள் அவள். காதளவோடிய கயல் விழிகள் துவளத் துவளச் செருமினாள். அவள் அழுதாள். களங்கப்பட்டு நின்ற பெண்? கறைப்படுத்தப்பட்ட கற்பு ஊர்வசி அழுதாள்!... சுடுநீர், மாலை மாலையானது. அன்னைக்கு மாலை சூட்டவா... இந்தச் சுடுநீர்மாலை? "ஊர்வசி, உன் வீடு வந்திட்டுது போகலாம்," என்று அவளை அழைத்தான் அம்பலத்தரசன். - ஆஸ்பத்திரியை நோக்கிச் சீசாவும் கையுமாக, நோயும் உடம்புமாகப் போய்க்கொண்டிருந்த கிழவர் ஒருவர் அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் மாறி மாறி மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டே சென்றார். அவன் கொடுத்த அழைப்பை அவள் செவிமடுத்ததாகத் தோன்றவில்லை. . அவள் தோளைத் தொட்டு, "ஊர்வசி," என்று கொஞ்சம் அழுத்தம் பதித்துக் கூப்பிட்டான் அவன். - அவளுக்குத் தன்னுணர்வு சிலிர்த்தது. அவள் ஏறிட்டு விழித்தாள். கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். சுற்றுமுற்றும் நோக்கினாள். "வீடு வந்திட்டுதே! வாங்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/53&oldid=1284003" இலிருந்து மீள்விக்கப்பட்டது