பக்கம்:கதாநாயகி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*49


"நானும் உசிரோடே இருக்குறேன், தாயே!" மகளின் கன்னங்களைத் தடவிக் கொடுத்தாள் அவள்.

அன்னையின் கண்ணீரைத் துடைத்தாள் ஊர்வசி.

மகளை ஆரத் தழுவினாள் மீனாட்சி அம்மாள். ஏதோ சிந்தனை வசப்பட்டாள், ஒரு வினாடி. பிறகு ஆத்திரம் பொங்கியது. அவளது தளர்ந்தொடுங்கிய வதனத்தில், "உன்னைக் கெடுத்த அந்தப் பாவி யாரம்மா? சொல்லு. இப்பவே போய் அவன் ரத்தத்தைக் குடிச்சிட்டு வந்திடுறேன்! சொல்லு மகளே!” என்று கேட்டாள். பழி வாங்கத்துடித்தாள் அவள்.

"அந்தப் பாவியின் ரத்தத்தைக் குடிக்கிற கடமை என்னோடயே இருக்கட்டும்!..... நீ ஆத்திரப்படாதேம்மா!.... அந்தத் துரோகியைப்பத்தி இப்போ ஒண்ணும் சொல்லமாட்டேன் நான்!... அவனை நானே உன் முன்னாலே கொண்டாந்து நிறுத்திடுறேன் அம்மா! என்னை நம்பும்மா!” என்று உறுதி மொழிந்தாள் அபலை ஊர்வசி. கையடித்துக் கொடுத்தாள்.

"அம்மா ஊர்வசி! நீ தானே என்னோடே நம்பிக்கை, நாணயம் எல்லாம்! நீ இல்லைன்னா, நான் மாண்ட இடம் எப்பவோ புல்மண்டிப் போயிருக்குமே!.... சரியம்மா !.....ஊம்...... இனி உன் கதி?...” என்று புதிய பிரச்னை ஒன்றைக் கிளப்பிவிட்டு, மீண்டும் விம்மத் தொடங்கினாள் மீனாட்சி அம்மாள்.

அன்னைக்குப் பதில் சொல்ல வாயைத் திறந்தாள் புதல்வி.

அப்போது, அங்கே தோன்றினான் அம்பலத்தரசன்! மீனாட்சி அம்மாளின் அருகில் வந்து நின்றான். "அம்மா, உங்க மகள் தனக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியத்தை ஒரு புதுச் சக்தியோடு சுமந்துக்கிட்டு, என்னை நம்பி வந்திடுச்சு ராத்திரி, தேவதையைக் கண்டதொப்ப இருந்திச்சு எனக்கு. நடப்பைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/59&oldid=1317297" இலிருந்து மீள்விக்கப்பட்டது