பக்கம்:கதாநாயகி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*55


வெகுவாகப் பாராட்டினீர்கள். இம்மாதிரி, விதி வசத்தால் கெட்ட நிலை அடைந்த அபலைகளைச் செயல் முறையிலும் ஆதரிக்கும் நிலை வளர வேண்டும் எனவும் தாங்கள் காந்திஜீயின் உரையை உதாரணம் காட்டிப் பேசினீர்கள்.

அந்தப் பேச்சு என் நெஞ்சத்தைத் தொட்டது. அப்போதே, தாங்கள் என் நெஞ்சில் இடம் பெற்றுவிட்டீர்கள், உங்களை ஒரு முறை அப்புறம் வழியில் சந்தித்து என் இல்லத்துக்கு அழைத்து வந்தபோது, என் இதயத்தைத் தங்களிடம் திறந்து காட்டவேண்டுமென்று துடித்தேன். ஏதோ ஒன்று அப்போது தடுத்துவிட்டது. அதற்குப் பெயர்தான் விதியோ?

இப்போதுதான் என்னுடைய அந்தக் கனவு பலிதமடைந்திருக்கிறது.

நான் மோசம் போன அபாக்கியவதி. சாகத்தான் இருந்தேன். ஆனால், என் அன்னையின் நினைவும், ஏமாற்றப்பட்ட என் பெண்மையின் வெஞ்சினமும் என்னைச் சாக அனுமதிக்க மறுத்தன.

நாடகம் முடிந்தது.

என் நாடகக் கோலத்தை அழித்துக் கொண்டிருந்தேன் நான், என் சொந்த உடைகளைத் தரித்துக்கொண்டு புறப்பட ஆயத்தப்பட்டேன். அப்போது நல்லவன் ஒருவன் அக்கணம் வரை நல்லவனாகவே நடந்து கொண்ட ஒருவன், தனக்கு மயக்கமாக இருப்பதாகச் சொல்லி என் உதவியைக் கோரினான். நாடக அரங்கில் வேறு ஓர் ஈ, காக்கை கூட இல்லை அப்போது. நான் அவனுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதுவரை மனிதனாக இருந்த அவன், க்ஷணப்பித்தம் கொண்ட நிலையில் மிருகமாக மாறி, என்னை மடக்கிப் போட்டுத் தன் வெறியைத் தணித்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/65&oldid=1319031" இலிருந்து மீள்விக்கப்பட்டது