பக்கம்:கதாநாயகி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்ணங்கள்....

சொந்தங்கள் சொல்லத்தானேபந்தங்கள்; சோதித்துப் பார்த்தால் வேறுஅர்த்தங்கள்!"

– என்ற கவிதைவரிக்கு ஏற்ப வாழ்க்கையின் தத்துவங்கள், மாறுபட்டு, வேறுபட்டு பயணிக்கின்றன.

தொடரும் வாழ்க்கை, ஒரு சோதனையல்ல; அது சாதனை என்ற உண்மையை சாதித்துக்காட்டும் துணிச்சல் மிக்க வீரப் பெண்ணின் கதையே “கதாநாயகி” என்ற இந்நூலாகும்.

கிராமியக் கதைகளில் தனி முத்திரைப் பதித்து வாசகர்களின் அன்புக்குப் பாத்திரமான எனது தந்தையார் அமரர். பூவை எஸ். ஆறுமுகம் அவர்களின் எழுத்தில் உருவான நகர பின்னணியில் அமைந்த வித்தியாசமான கதை இது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் தொடராக வெளிவந்து ஏராளமான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற இக்கதையை தொகுத்துப் புதினமாக உங்கள் பார்வைக்கு படைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

எனது தந்தையாரின் நீண்ட நாள் கனவை நினைவாக்கும் வகையில் பூவை பதிப்பகம் ஆரம்பித்து “பூவையின் சிறுகதைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பை கடந்த ஆண்டு வெளியிட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றதைத் தொடர்ந்து “கதாநாயகி” என்ற இப்புதினம் தற்போது உங்கள் கைகளில் தவழ்கிறது.

V

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/7&oldid=1319098" இலிருந்து மீள்விக்கப்பட்டது