பக்கம்:கதாநாயகி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*63



கோழைகளுக்காக வாழ்வே இல்லை! வேடதாரிகளுக்கும் வாழ்வு இல்லை!

எந்த ஒரு நிலையிலும், எந்த ஒர் அபவாதத்தையும் ஏற்க - அப்படி ஏற்பதால் இன்னொரு ஜீவனுக்கு வாழ்வு கொடுக்க முடியுமென்கிற புண்ணியக் கடமை காத்திருக்குமென்று தோன்றினால், அத்தகைய அவதூறை ஏற்கச் சித்தமாக இருக்கவேண்டும் மனிதன்!... அதுவேதான், நாகரிகமான சமுதாயத் தொண்டாக ஆகமுடியும்! தமிழ்ப்பண்பாட்டுக்கு இந்நிலை மூலம் ஒரு புதிய பொருளும் கிடைக்குமல்லவா?

இக்கருத்தைச் செயற்படுத்த இக்கதாசிரியர் இனியேனும் முயல்வாராக!...."

விமரிசனம் முடிந்தது.

மின்விசைப் பொத்தான், விளக்கை ஏற்றியது.

கையெடுத்துக் கும்பிட்டான் அம்பலத்தரசன். ஊர்வசியின் அழகிய, நிர்மலமான முகம் அவனது மனத்தின் கண்களில் நிழலாட்டம் போட்டது. தன்னை மறந்து இரவு தூங்கிய அந்தப் புனித எழிலை அவனால் எப்படி மறக்கக்கூடும்? படுத்தவன், தூக்கம் பிடிக்காமல் எழுந்தபோது, அவள் அலங்கோலமான உறக்கத்தில் கட்டுண்டிருந்தாள். மார்பகத்திலே காணப்பட்ட நகத் தழும்புகள் அவன் நோக்கில் பட்டன. ஒரு கணம், அவன் கலங்கினான். ஆனால் மறுகணம், அவனது மனத்தின் ஒரு முடுக்கில் வாசம் செய்த பழைய மிருகவெறி கிளர்ந்தெழுந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னுள் ஏற்பட்டிருந்த மோகக் கிளர்ச்சியின் வெறித்தனத்தை விளையாடவிட அவன் ஒப்பவில்லை. கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் சில கணங்கள் ஆழ்ந்தான். தன்னுள்ளே ஆக்கிரமித்திருந்த பேய்க்கணங்கள் விடுதலை பெற்றன. அவ்விடுதலைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/73&oldid=1319055" இலிருந்து மீள்விக்கப்பட்டது