பக்கம்:கதாநாயகி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 65


பாட்டுக் கிடைத்தது. "நீ சிரித்த வேளை அது வாழ்வில் நீ சிரித்த வேளை அது! கனவென்று வந்து, 56TGು நீயாகிக் கனவென்று சிரித்தாய் நீ - இன்பக் கனவென்றெ களித்தாய் நீ! நனவென்று வந்து, நனவே நீயாகி நனவுக்கு puTಣTು நீ - அன்பின் நனவுக்கே வழியானாய் நீ! நீ சிரித்த வேளை அது - வாழ்வில் நான் சிரித்த வேளை அது." பேனாவைக் கீழே வைத்தான் அம்பலத்தரசன். ஊர்வசியின் நெஞ்சத்திற்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மீண்டான், அம்பலத்தரசன். அந்தச் சித்து விளையாட்டு ஒரு நல்ல கவிதையை அவனுக்குக் கொடுத்துவிட்டதல்லவா? பூமிநாதனை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அம்பலத்தரசன். அவனைப் பார்த்துவிட்டு, ஊர்வசியைச் சந்திக்கச் செல்லவேண்டுமென்பது அவன் கருத்து. பங்களாவுக்கும் கடிகாரத்துக்கும் ஒட்டுறவு இருக்க வேண்டாமா? 女女女

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/75&oldid=1284023" இலிருந்து மீள்விக்கப்பட்டது