பக்கம்:கதாநாயகி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

(9)

 உலகம் போற்றுகின்ற நாவலாசிரியை பெர்ள் பக்கின் 'பியோனி' புரண்டு கொண்டிருந்தாள்...

டேவிட், பியோனி கதையின் வாழ்க்கையைத் தொடர விரும்பாமல், அப்படியே அந்நாவலை அம்பலத்தரசன் மூடிவைத்தான். அடையாள நாடா நீலம் பாய்ந்து விளங்கிற்று.

ஊர்வசியின் டைரி அவன் பார்வைக்காகக் காத்திருந்தது. டைரிகளில் சில கதாசிரியர்கள் சஸ்பென்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், ஊர்வசியோ அவன் கவனத்துக்கென்றே சொல்லி விட்டுத்தான், அதை வைத்துச் சென்றிருந்தாள். அவள் விருப்பப்படியே, அந்த நாட்குறிப்பைப் புரட்டினான் அவன். தெருவில் பூவிற்றுச் சென்றான். 'இனிமேல் தினமும் பூவேண்டும்!'

ஒன்று :

'...விமர்சகர் அம்பலத்தரசன் அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் இன்று கிடைத்தது. என் நெடுநாளைய ஆசை நிறைவேறியது. எவ்வளவோ அன்பாகவும், அடக்கமாகவும் காணப்பட்டார். மனநெகிழ்ச்சி கொண்டவர் என்பது அவரது தலைமைப் பேச்சிலிருந்து விளங்கியது. இனம் விளங்காத ஒர் அன்பு அவர்பால் எனக்குப் பீறிடுகிறது. அவர் இந்த என் முதல் நாடகத்தின் நடிப்பையே இப்படிப் புகழ்கிறாரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/76&oldid=1319313" இலிருந்து மீள்விக்கப்பட்டது