பக்கம்:கதாநாயகி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கதாநாயகி


சொல்லிவிட்டு, நாணயத்தோடு ஒத்திகையில் ஈடுபட்டார். பணக்காரப் பிள்ளையானாலும், மிகுந்த அன்புடன் பழகுகிறார்! அமைதியான மனிதருக்கு எப்படிப்பட்ட அருவருப்பான பாத்திரம் கிடைத்திருக்கிறது. நாடகத்திலே!. பாவம்'...' ஐந்து : '.கில்லாடி ஒருவனின் கன்னத்தில் எண்ணி இரண்டு அறைகள் கொடுத்தேன்!...' ஆழ் '. இன்று அரங்கேற்றப்பட்ட வாழ்வதற்கே நாடகத்தில் எனக்கு நல்ல புகழ் கிடைத்தது. - ஆனால், அப்புகழை அனுபவிக்க வொட்டாமல், நான் அபலையாகிவிட்டேன். என் கற்பை பெண்மையைக் களவாடிவிட்டான் பாவி...! அந்தப் பாவியின் பெயரை நான் நீதிதேவன் சந்நிதியில் சொல்லிவிட்டேன்! நீதி விசாரணையை ஆண்டவன் நடத்தும் வரை, நான் பொறுக்க மாட்டேன்! நானே ஒருநாள் அவ் விசாரணையை நடத்திக் காட்டுவேன்!... .. கறைபட்ட நிலவுக்கு அடைக்கலம் தந்தார் என் அன்பர் அம்பலத்தரசன். அவர் என்னுள் தோன்றும் போதெல்லாம் இனம் விளங்காத பாசம் இதுவரை என்னுள் முகிழ்த்து வந்ததன் தாத்பரியத்தை இன்றிரவு என்னால் உணர முடிந்தது. எனக்கு நல்வாக்குக் கொடுத்துவிட்டார் அவர். அவரது தூய அன்பு என்னை வாழ்த்தும்; அவரது தூயமனம் எனக்குப் புதுவாழ்வு அருளும். என் கனவும் பலித்துவிடும். எனக்குக் கிட்டிய தோல்வியைக் கடந்து, எனக்கு நிழல் தந்த அவர்தான் மனிதர். என்னுடைய களங்கத்தைத் தன் தியாக நெஞ்சிடைத் தாங்கி, என்னை ஏற்கத் துணிந்த அவரே எனக்குக் கடவுள் ஆம்; கடவுளை நான் தரிசித்துவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/78&oldid=1284024" இலிருந்து மீள்விக்கப்பட்டது