பக்கம்:கதாநாயகி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 69


அத்துடன் முடிந்தன நாட்களின் குறிப்புகள். அம்பலத்தரசன் உணர்ச்சி வசப்பட்டுப் பரவச நிலையில் அமர்ந்திருந்தான். அவ்வுணர்வின் நாயகியாக ஊர்வசி ஆடினாள். நகை குலுங்க ஆடினாள். அவன் நெஞ்சம் ஆடுகளம் ஆனது. அது ஜோதிகூடித் திகழ்ந்தது. 'என் சொத்து என் ஊர்வசி என் நெஞ்சைத் திறந்து காட்டிவிடவேண்டும் அவளுக்கு. அப்போதுதான் எனக்கும் ஆறுதல் அவளுக்கும் ஆறுதல். கெட்டவனாக இதுவரை இருந்த என் நிலையையும் ஒளிக்கமாட்டேன். நெஞ்சை ஒளிந்து வஞ்சகம் இருக்கக் கூடாதல்லவா? . எல்லா நடப்பையும் விளக்கித் தன் தாய்க்குக் கடிதம் போட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்தான். தந்தையின் முகம் அறியாத அவனைத் தன் உயிரைக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய தெய்வம் அவன் அன்னை. தஞ்சாவூரில் பாம்பாட்டித் தெருவில் 'ஆப்பக்காரி அஞ்சுகத்தம்மாள் என்ற பட்டப் பெயரைச் சுமந்துதான் அவனை ஆளாக்கினாள் அந்தத் தாய்!. . மனம் என்னும் வேள்வியைக் கொண்டு செலுத்த, வாழ்க்கை என்னும் தீக்கு, தியாகம் என்னும் ஆஹ' யைப் பயன்படுத்தும் பக்குவம் அவனுள் பண்படத் தலைப்பட்டது. இயல்பாகவே அவனது உதிரத்தில் நிலைத்துப்பரவியிருந்த மனிதாபிமானம் மனிதத்தன்மையும் இந்நிலைக்கு என்றென்றும் கைகொடுக்கும் என்றும் அவன் நம்பினான். 'இனி எனக்கு ஊர்வசிதான் ஆணை. அவள் இஷ்டம்தான். என் எதிர்கால வாழ்வு' என்ற முடிவும் அவனுள் உருப் பெற்றிருந்தது. . . . . . தன்னைப் பலிகொண்ட நீசனை அவள் ஏன் காட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/79&oldid=1284025" இலிருந்து மீள்விக்கப்பட்டது