பக்கம்:கதாநாயகி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 73


அப்பொழுதுதான் புதிய அர்த்தமும் உண்டாக முடியும். எங்கள் இருவர் வரையிலும்!... எங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்னும் புரட்சி முடிவை அப்போதுதான் இந்த விந்தை உலகம் அங்கீகரிக்கவும் செய்யும்...' சிகெரட்டின் எரிந்த சாம்பல் துகள்கள் காற்றில் மிதந்தன. அம்பலத்தரசன் நடந்தான். பிரபாத் டாக்கீஸில் புரட்சி நடிகரின் சிரிப்பை ரசித்துவிட்டு, எதிர்தெருவில் மடங்கினான். புரட்சி என்றால் அதன் வசீகரமே அலாதிதானோ? அப்போது, "ஹல்லோ" என்ற பழகிய குரல் கேட்கவே, திரும்பிப் பார்த்தான் அம்பலத்தரசன். அழைத்தவன் பழக்கமானவன். 'லாம்ப்ரெட்டா வில் வீற்றிருந்தான் அவன். கருணாநிதி என்று பெயர். மேல்பட்டப் பிள்ளை; அவனுக்கு உத்தியோகம், பொழுதைக் கழிப்பது. அதாவது, பொன்னான - காலத்தைக் கொல்வது! அவன் கண்டனுபவிக்காத பொன்னா, என்ன? "உங்க ட்ராமா ரெவ்யூ ரொம்ப நேர்த்தியாய் இருந்திச்சு, அம்பலத்தரசன்" என்றான் கருணாநிதி. "ரொம்ப சந்தோஷம், கருணாநிதி!" என்றான் அம்பலத்தரசன். ஆனால் அவன் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக ஒரு வகை அருவருப்புத் தோன்றியது அவனுடைய முகத்திலே! "ஆனால் ஒரு சந்தேகம், மிஸ்டர் அம்பலத்தரசன்." "GaTమణుఖTGD!" - - - "ஊர்வசி கற்பழிக்கப்படுகிறாள்!..." என்று கருணாநிதி எடுத்த எடுப்பில் பேச்சைத் தொடங்கவே, அம்பலத்தரசனுக்கு அப்பேச்சைக் கேட்டதும், பிரமிப்பு உண்டாகிவிட்டது. உடனே சமாளித்துக் கொண்டான். "அதாவது நீங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/83&oldid=1284028" இலிருந்து மீள்விக்கப்பட்டது