பக்கம்:கதாநாயகி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 79


ரூபத்திலே வந்து உன்னை மூச்சந்தியிலே பழிவாங்கியிருக்குது!... தெய்வத்துக்கும் மனச்சாட்சிக்கும் பயப்படப் பழகாதவன் கதி இதுதான். ஒடு. ஒடிப்போய் உன் பணப் பெட்டியைத் தஞ்சம் அடை!... உன் பணம் என்னை என்ன செய்கிறதின்னு பார்க்கிறேன்... ஊம், ஒடு!..." என்று ஆவேசமாகக் கூச்சலிட்டான் அம்பலத்தரசன். ஒரு கணம். கருணாநிதி தலை குனிந்தான்!... . அடுத்த கணம் அவனுடைய பற்கள் நறநற வென்று சத்தமிட்டன. மூன்றாவது கணத்தில் கருணாநிதியின் லாம்ப்ரெட்டா காரினும் கடிது சென்றது!... - அம்பலத்தரசன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, சிகரெட்டை எரியவிட்ட வண்ணம் நகரலானான். அப்போது ரிக்ஷாவாலா ஒருவன் அம்பலத்தரசனிடம் ஒடி வந்து, "ஷார்! நீங்கள்தான் தெய்வம்... சாமி!" என்று சொல்லி, கவனிப்பாரற்றுக் கிடந்த அந்தப் பாழடைந்த கோயிலைச் சுட்டிக் காட்டினான். 'பெர்க்லி தலையை நீட்டியது. உடன் வரும்படி ஊர்வசி வேண்டிக்கொண்டதற்கா இந்தச் சோதனை? 'சோதனையா இது ஆம்; கருணாநிதிக்கு இது சோதனை! ஆனால், இது என்னுடைய கடமையின் சாதனை அல்லவா?. தலைநிமிர்ந்து அவன் நடந்தான். கற்பு என்கிறது பெண்ணுக்குள்ள தனிச்சொத்து மட்டுமல்ல!... ஆணுக்கும் உள்ள தனிச் சொத்துத்தான்...' தான் கருணாநிதியிடம் எடுத்துக்காட்டிய அக்கருத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/89&oldid=1284034" இலிருந்து மீள்விக்கப்பட்டது