பக்கம்:கதாநாயகி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 85


செஞ்ச சூது அது. நான் செஞ்ச பாவம் அது. உன்னைச் சந்திக்காமல் இருந்திருந்தா, இன்னமும் அந்தப் பாவம் என்னைத் தொடர்ந்துகிட்டுதான் இருக்கும். இப்போ, அந்தக் கெட்ட ஞாபகமே என்னைவிட்டு அஞ்சி ஒடிட்டுது!... உன்னைச் சந்திச்சவேளையோட மகிமை இது! இதான் உண்மையும்கூட!... சத்தியமாச் சொல்லுறேன். இனி நான் உன்னைத் தவிர, வேறெந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன்! இது சத்தியம்! இந்த நடப்புக்களை உங்க கிட்ட சொல்லி, பாவமன்னிப்பு வாங்கிக்கிட வேணும்னுதான் ஞாபகமாக நினைச்சுக்கிட்டே வந்தேன்!” அவன் முடித்தான். ஆனால் அவன் கண்ணிர் முடியவில்லை. "அத்தான், உங்களோட இந்த மனசு யாருக்கும் வராதுங்க!" அவளும் கலங்கினாள். அப்போது அங்கு வந்தாள் மீனாட்சி அம்மாள். விருந்தாளியை வரவேற்றாள். பிறகு மகளைப் பார்த்து, "மாப்பிள்ளைக்கு போன் பேசினதுக்குள்ள சமாசாரத்தைச் சொல்லலையாம்மா? " என்று பையக் கேட்டாள் முதியவள். 'இல்லையே! என்கிற பாவனையில் வருத்தம் காட்டினாள் ஊர்வசி. "உங்களைத் தேடிக்கிட்டு ஒரு பொண்ணு வந்திச்சு. ரொம்ப முடியாமல் இருக்குது. உள்ளே படுக்க வச்சிருக்கோம்" என்று குறிப்பிட்டாள். ஊர்வசியைத் தொடர்ந்து உள்ளே சென்றான் அம்பலத்தரசன். அவன் கால்கள் பின்னுக்கு இழுத்தன. சமாளித்தபடி உள்ளே நுழைந்தான். - உடல் நலிந்தும் அழகு நலியாமல், படுத்த படுக்கையாகக் கிடந்தாள் பெண் ஒருத்தி. - அவளைப் பார்த்தான் அம்பலத்தரசன். பார்த்த மாத்திரத்திலே, அவனிடமிருந்து கண்ணிர் பெருகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/95&oldid=1284039" இலிருந்து மீள்விக்கப்பட்டது