பக்கம்:கதாநாயகி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கதாநாயகி


பகவான் சோதிச்சுப் பழகிறத்துக்குத்தான் நாம் பிறந்திருக்கோம். உங்களுக்கு ஏற்பட்ட சோதனை ஒரு மாதிரி. ஆனா, எனக்கு ஏற்பட்ட சோதனையை நீங்க அறிஞ்சா, மனசு வெடிச்சுப்போயிடுவீங்க. அப்புறம் கேளுங்க என் அத்தானை. அவங்க சொல்லுவாங்க கதையை, ஆமா, கதையை' ஊர்வசி தடுமாறினாள். ஐந்தாறு நிமிஷங்கள் சென்றபின்னரே மீனாட்சி அம்மாள் வந்தாள். வந்தவள், ஹார்லிக்ஸ் கலந்திருந்த தம்ளரை மங்கையர்க்கரசிக்குக் கொடுத்தாள். காப்பித் தம்ளரை அம்பலத்தரசனிடம் சமர்ப்பித்தாள். "ரெண்டு பேரும் சாப்பிடுங்க!" என்று உபசரித்தாள் ஊர்வசி, "தங்கச்சிக்கு" ... என்று கேட்டாள் மங்கையர்க்கரசி. "நான் கொடுக்கமாட்டேனா?" என்று உரிமை பற்றினான் அம்பலத்தரசன். பாதிக் காப்பி மீதிக் காப்பி ஊர்வசிக்குக் கிடைத்துவிட்டது. அம்பலத்தரசன் பொய் சொல்வானா? "அக்கா இங்கேயே தங்கட்டும்" என்றாள் ஊர்வசி. வேணாம். மங்கையர்க்கரசியை தங்கசாலையிலே எனக்குத் தெரிஞ்ச டாக்டரம்மாளோட நர்ஸிங் ஹோமிலே சேர்த்திட்டு வந்திடுறேன். அதுதான் நல்லது!..." என்று எழுந்தான் அவன்; எழுந்து, நடந்து, மீண்டும் திரும்பினான். டாக்சியில் திரும்பினான் அவன். மங்கையர்க்கரசியைப் பதனமாக வாடகைக்காரில் ஏற்றிவிட்டார்கள் தாயும் மகளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/98&oldid=1284042" இலிருந்து மீள்விக்கப்பட்டது