பக்கம்:கதாநாயகி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 89


கையெடுத்துக் கும்பிட்டு விடைபெற்றாள் மங்கையர்க்கரசி. கண்முனைக் கசிவு நிற்கவில்லை. "போய் வருகிறேன் ஊர்வசி, உன்கிட்டே நிரம்பப் பேசவேணும்," என்றான் அம்பலத்தரசன். "சரிங்க!... ராத்திரி சாப்பாடு இங்கேதான். சீக்கிரம் வந்திடுங்க. உங்களுக்குப் பிடித்தமான கோழிப் பிரியாணி தயாராகிறது!... உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்போம்!" என்று அன்பால் எச்சரித்தாள் ஊர்வசி. வெண்முத்துப் பற்களிலே பிறை ஒளிர்ந்தது; ஒளிந்தது. "உத்தரவு டியர்' பெண் மானாகக் கண்களைச் சிமிட்டினாள் ஊர்வசி: 来来米

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/99&oldid=1284043" இலிருந்து மீள்விக்கப்பட்டது