பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்காம யாத்திரை

                         1    
                      திசை மாரா           
   "இலங்கைக்கு வந்து கண்டியில் தமிழ் விழாவுக்குத் தலைமை வகிக்க வேண்டும்" என்ற கடிதம் கண்டியிலிருந்து எனக்கு வந்தது. கணேஷ் என்ற பழைய அன்பர் அதை எழுதியிருந்தார். முன்பு தமிழ் விழா மிகவும் விமரிசையாக யாழ்ப்பாணத்தில்  நடந்தபோது பல அன்பர்கள் அங்கே சென்று அப்படியே இலங்கையில் உள்ள பல இடங்களைப் பார்த்துவிட்டு வந்தார்கள். "அந்த விழாவுக்கு நான் போக வில்லை. ஆனுலும் "முருகன்" திருவருளால் எப்போதாவது நமக்குத் தனியே அழைப்பு வரும் என்று எண்ணியிருந்தேன் . எண் எண்ணம் விரைவில் கை கூடியது.
  கண்டியில் நடைபெறும் ஒரு சிறிய தமிழ் விழாவுக் குத் தலைமை வகிப்பதற்காகப் போக நேர்ந்தது. அன்பரிட மிருந்து அழைப்பு வந்தவுடனே, "கதிர்காமத்துக்குப் போக வேண்டும்" என்ற என் விருப்பத்தை எழுதினேன். அவர், "நானும் போகவேண்டுமென்று எண்ணியிருந்தேன் . நீங்களும் வருவதாக இருந்தால் என் நெடு நாள் அவனேத் தீர்த்துக் கொள்வேன்" என்று எழுதினர். அவருடைய  அன்பையும் மரியாதையையும் என்ன வென்று சொல்வது! 'கதிர்காமத்தை எனக்குக் காட்ட அவர் வரவில்லையாம்: தாம் தரிசிக்க என்னத் துணையாகக் கொள்கிறோம்!' என்று அவர் உள்ளப்பெ ருமையை நினைத்து பாராட்டினேன்,