பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

牟下 - கதிர்கா யாத்திரை

வேண்டும். வ்ழியில் காட்டு மிருகங்கள் வரும். கதிர் காமவேலனிடம் பக்தியில்லாதவர்கள் அந்த விலங்கு களுக்கு இரையாக வேண்டும். முக்கியமாக யானைக் கூட்டம் இந்த வழியில் மிகுதி. உண்மையான பக்தி யோடு அரோஹரா என்று சொன்னல் யானைகள் வழி விடும். வழியில் உள்ள சிங்களவ வேடர்களும் பொல்லா தவர்கள். காசு பணம் கண்டால் கொலேக்கும் அஞ்சாத, வர்கள்" என்று கதை பேசுகிருர்கள். ஏதோ ஒரு காலத்தில் கதிர்காமத்துக்குப் போவது கஷ்டமாக இருந்திருக்க லாம். போக்கு வரத்து வசதிகள் இல்லாத காலம் அது. நம்முடைய காட்டில்கூடப் பழனிக்குப் போவது அந்தக் காலத்தில் கஷ்டங்தான். பழங் காலக் கதையை இன்னும் அப்படியே சொல்லிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.

கதிர் காமத்துக்குக் கொழும்பிலிருந்துதான் யாத்திரி கர்கள் பெரும்பாலும் வருகிருள்கள். கொழும்பிவிருந்து சற்றேறக் குறைய 170 மைல் துரத்தில் கதிர்காமம் இருக்கிறது. அழகான ரோடு வசதி உண்டு. இடை யிட்ையே பல ஊர்கள் இருக்கின்றன. எந்த வழியாக வந்தாலும் திசை மாராவுக்கு வந்து அங்கிருந்துதான் போக வேண்டும். திசை மாரா வரையில் கல்ல தார் ரோடு;. அப்பால் சற்றுச் சுமாரான ரோடு இருக்கிறது. - திருவிழாக் காலங்களில் லட்சக் கணக்கான ஜனங்கள்

வருவார்களாம். அந்தக்காலங்களில் திசை மாராவோடே. கார்களெல்லாம் நின்றுவிடும். அதற்கு அப்பால் கடந்தே செல்வார்கள் பக்தர்கள். அரோஹரா அரோஹரா என்று சப்தம் போட்டுக்கொண்டே போவார்கள். யாராவது, கதிர் காமம் போகும் சாலையில் போளுல் சாலைக்கருகில் வாழும் ஜனங்கள், 'அரோஹரா!' என்று சொல்கிரு.ர்கள். சை மாராவில் இந்த 'அரோஹரா ஒலி ஆரம்பமாகிறது. திசை மார்ா என்ற சிங்களப் பெயரைப் பற்றி, ஆர்ாய்ந்தேன். பககத்தில் இருந்தவர்களைக் கேட்டேன்.