பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசை மாரா 5

திஸ்ஸ் மஹாராமம் என்பதே அப்படி மாறி வழங்கியதா கத் தெரிந்தது. ஆராமம் என்று பெளத்தர்கள் தங்கள் கோயிலை வழங்குகிருர்கள். திசை மாராவில் மிகப்பெரிய பெளத்தக் கோயில் ஒன்று இருக்கிறது. அது திஸ்ஸன் என்ற அரசனல் கட்டப்பட்டது. அதல்ை அந்தக்கோவி லுக்குத் திஸ்ஸ மகா ஆராமம் என்ற பெயர் ஏற்பட்டது. பெளத்தர் கோயில்களே டகோபா என்று இப்போது யாவரும் சொல்கிரு.ர்கள். வட்டவடிவமான மேடை அதன் மேலே ஒரு மீண்ட ஸ்து பி. குங்குமச்சிமிழ் மூடி யின் கொண்டையை நீட்டிவிட்டால் எப்படி இருக்குமோ அத்தகைய உருவம் உடையது. டகோபா இலங்கை முழு வதும் சிறியதும் பெரியதுமாகப் பல டகோபாக்களைக் காணலாம். திசைமாராவில் உள்ள டகோபா மிகப்பெரியது. பெளத்த பிக்ஷாக்களின் அங்கங்களில் பல், மயிர். நகம் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து மேலே இந்தக் கோயிலைக் கட்டுவார்களாம். புத்தருடைய பல் உள்ள கோயில் ஒன்று கண்டியில் இருக்கிறது. அதைத் தலத மாளிகை என்று சொல்கிருர்கள். இந்தக் கோயில் கள் எல்லாவற்றையும் தாது கோபம் என்று நூல்கள் கூறும் தாது கோபம் என்பதே டகோபாவாகச் சிதைந்து வழங்குகிறது போலும், . . . . . . . . . .

திஸ்ள மன்னன் கட்டிய மகாராமத்தின் உன்னத மான தோற்றம் கதிர் காம வேலனைக் காணச் செல்வேர் ருக்கு வழி காட்டும் அடையாளம் போல இருக்கிறது. கதிர் காம வேலனின் ஆலயச் சூழல் அங்கிருந்தே தொடங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அரோஹரா சப்தமும் பக்தர்கள் காலால் நடப்பதும் அங்கேதான் ஆரம்பமாகின்றன. * . .

திசைமாரா சிறிய ஊர். அங்கே ஒரு பெரிய ஏரி இருக்கிறது. அதன் கரையில் யாத்திரிகர் விடுதி {Guest House) gorgop அரசாங்கத்தார் நடத்தி வரு