பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால் வழியே 7 கூட்டம் நடந்து செல்கிறது. காற்றும் வெயிலும் மழை யும் இடியும் அவர்களுடைய யாத்திரையைக் குலேக்கும் ஆற்றல் உடையன அல்ல. காட்டு விலங்குகளும் வேட்டு வக் கூட்டத்தினரும் அவர்களைப் பயமுறுத்த முடியாது. சாதி வேறு, சமயம் வேறு, ஊர் வேறு, உணவு வேறு, தொழில் வேறு, கெளரவம் வேறு என்று வேறு பிரித்து அறியும் மனித சாதியினரே இந்தச் சாலேயிற் போகிருர் கள். ஆல்ை இங்கே அந்த வேறுபாடுகளுக்கே இடமில்லை. யாவரும் ஒரே நிலையிலே ஒரே நினைவோடே இருக்கிருர்கள். கதிர்காம வேலனைக் காணத் துடிக்கும் ஆவல் கொண்ட வர்கள், தங்களேயே மறந்து, கதிர்காமத் திருமுருகன் அருட் செல்வத்தைப் பெற ஏங்கி சிற்கும் ஏழையர்களின் கூட்ட மாகச் செல்கிருர்கள். பல காதங்கள் காலால் கடந்து வந்தோர். பலர்; சொந்தக் காரிலே வந்தவர் பலர்; பஸ்ஸிலும் ரெயிலிலும் வங்தோர் பலர்; இத்தனை பேரும் இப்போது காலால் நடக்கின்றனர். அவர்களுக்குள்ளே வேற்றுமை இல்லை. இறைவன் கினேவாகிய செல்வமுடை யவர்களாதலால் எல்லோரும் பணக்காரர்களே. -

மழுங்க முண்டிதம் செய்த தலையுடன், கழுத்தில் ருத்தி ராட்ச மாலையும், இடையில் காவியுடையும், உடம்பெல் லாம் திருநீறும் அணிந்த பரதேசி அதோ செல்கிருர் கன் ருகத் தாடியையும் மீசையையும் வளரவிட்டுச் சடை வளர்த்த சாமியார் ஒருவர் இதோ வருகிருர் அழகாகத் திருநீற்றைத் திரிபுண்டரமாக இட்டு, உச்சிக் குடுமியும் இடையில் கச்ச வேஷ்டியும் அணிந்த சைவ அன்பர் ஒருவர் வருகிருர் பார்க்கும்போதே யாரோ காட்டுமிராண்டி என்னும்படியான தோற்றமும் கந்தலாடையும் உடைய ஏழை அவருக்கு அருகிலே நடக்கிருன் ஆடையாபரணங். கள் அணிந்த செல்வரும் அவர் மனைவியும் உடன் வருகின் றனர். காவடி சுமப்போர் ஒருபுறம், திருநீற்றை ஏந்து வோர் ஒருபுறம், வேல் கைக்கொண்டோர் ஒருபுறம்,