பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கதிர்காம பாத்திரை

சாம்பிராணிக் கலசம் கொண்டோர் ஒருபுறம். சிறு குழங்தையை ஏக்தி வரும் தாயும், அவளுக் கருகில் தலே கரைத்த மூதாட்டியும் வருகிருர்கள். உலகத்தில் உள்ள மக்கட் கூட்டத்தினரில் எத்தனே வேறுபாடு உண்டு என் பதை இந்தக் கூட்டத்திலேயே கண்டு தெரிந்துகொள்ளும் படியாக இருக்கிறது, அவர்களுடைய காட்சி. - புனுகு படியும் மேனியிலே புழுதி படியச் செல்வார் பலர். மாசில்லாத ஆடையிலே மண் படியப் போவார் பலர். கதிர்காமத்தைப் பலகால் பார்த்தாரும், முதல் முறையாகக் காணச் செல்வாரும், பிரார்த்தனையை நிறைவேற்றச் செல் வாரும் பலர். சைவ மக்களும் பெளத்த ஜனங்களும் கிறிஸ்த வர்களும் முஸ்லிமானவர்களுங்கூட இந்தக் கூட்டத்தில் பரவி யிருக்கின்றனர். கதிர்காம வேலவன் எல்லா மதத்தின ருக்கும் எல்லாச் சாதியினருக்கும் உரிய சமரசத் தெய்வம் என்பதை இந்த அடியார் கூட்டம் புலப்படுத்துகிறதே!

கூட்டம் கூடும் இடங்களிலும், திருவிழாக் கூட்டங் களிலும் வம்புப் பேச்சும், காணுமற் போவோரைக் கதறி அழைக்கும் கூச்சலும், பண்டம் விற்பவர்களின் பேரிரைச் சலும் காண்பது இயல்பு. எங்கே கூட்டம் கூடினுலும் அங்கே விற்பனையும் விளம்பரமும் இல்லாமல் இருப்ப தில்லை. இது வியாபார உலகம், விளம்பர யுகம். இங் கேயோ வம்புப் பேச்சுக்கு வாயில்லை; பண்டம் விற்பவ ருக்கு வேலே இல்லை. எங்கும் யார் வாயிலும் ஒரே முழக் கந்தான். 'அரோஹரா அரோஹரா ஆரோஹரா!' என்ற முழக்கம் காது செவிடுபடக் கேட்கிறது. அப்படிச் சொல்வது தவறு. வம்புப் பேச்சையும் மற்றச் சத்தங்களே யும் கேட்டு மாசு படிந்த அந்தச் செவிகளினூடே, அசோ

ஹரா முழக்கம் புகுந்து துளைத்து உள்ளே சென்று உள் ளத்தில் உணர்ச்சியைத் துண்டுகிறது. - o இத்தகைய கூட்டத்திலே கலந்துகொண்டு பழக்க மில்லாத ம்க்கள்கூடத் தங்களே அறியாமலே 'அரோ