பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O கதிர்காம யாத்திரை

காமல் இருக்கவேண்டுமென்று அதைத் துடைத்துக்கொண் டேன். கார் போய்க்கொண் டிருந்தது.

இருமருங்கும் அடர்ந்த காடுகள். இடையிடையே கீரிப் பிள்ளேயும் பாம்பும் சாலையிடையே ஓடின. குரங்கு கள் பல்லேக் காட்டின. அங்கே உள்ள குரங்குகள் கரையும் கருமையும் உள்ள குரங்குகள். முகத்தில் மயிர் அடர்ந் தவை; கருங் குரங்கைப் போன்ற தோற்றம் உடையவை; ஆளுல் அத்தனே கருமை இல்லை. ‘. . . .

எவ்வளவோ காலமாக, இந்தச் சாலை உண்டாகாத தற்கு முன்பே, பக்தர்கள் காலால் கடந்து வழி உண்டாக்கி வந்து, கதிர்காம முருகனத் தரிசித்து ஆனந்த மடைந்தார் கள். அவர்கள் வழி நடையில் உண்டான துன்பத்தையே மறந்திருப்பார்கள். உடம்புணர்ச்சியே இல்லாமல் போயி ருக்கும் என்று நினைத்தேன். - * . . -

கதிர்காமத்துக்கு வந்துவிட்டோம் ” என்ருர் அன்பர். -

எங்கே? -

இதோ மாணிக்க கங்கை இதற்கு அக் கரையிலே

தான் கோயில் இருக்கிறது ' என்று தெரிந்தவர்கள் சொன்னர்கள். -

எங்கள் முன்னே மாணிக்க கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

3

மாணிக்க கங்கை மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தைசொலச் சற் குருவும் வாய்க்கும் பாபரமே! என்று தாயுமான ஸ்வாமிகள் பாடினர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் சிறப்பாக எல்லா இட்ங் களிலும் அமைவதில்லை. தலந்தோறும் தீர்த்தங்கள் இருக்