பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்க கங்கை 13

மருதமரம் என்ருலே மூன்று தலங்கள் கினேவுக்கு வருகின்றன. இந்தியாவில் வடக்கே உள்ள மல்லிக்ார் ஜுனம் மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டது. அதனை ரீ சைலம் என்றும் சொல்வார்கள். அது தலை மருதுார். தமிழ் காட்டின் பகுதியாகிய சோழ மண்ட லத்தில் மற்ருேர் அர்ஜுன கேத்திரம் அல்லது மருதூர் இருக்கிறது. அதுதான் திருவிடை மருதுரர். இடை மருதுரராகிய அதை வடமொழியில் மத்தியார்ஜ-சனம் என்று சொல்லுவார்கள். தலையும் இடையும் இருந்தால், மூன்ருவதாகக் கடை ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்? பாண்டி காட்டில் திருப்புடைமருதூர் என்ற தலம் இருக். கிறது; இது, புடார்ஜுன புரம் என்று வடமொழியில் வழங்கும். இன்னும் பல இடங்களில் மருதமரம் உண்டு.

மருதமரம் என்ருல் இத்தனே நல்ல நினைவுகள் எழும். இந்தத் தெய்வத் திருத் தலங்களின் கினைப்போடு கதிர் காமத்தின் கினேப்பும் சேர்ந்து எழுவதற்குக் காரணமாக மாணிக்க கங்கையின் கரையில் மருதமரங்கள் உயர்க் தோங்கி நின்றன. •. . - * .

ஆறு அதிக அகலம் இல்லை. ஐம்பது அறுபது அடி, அகலந்தான் இருக்கும். அப்பொழுது அதிக வெள்ள மும் இல்லை. ஒன்றரையடி நீரே ஓடிக்கொண்டிருந்தது. சிறி தும் அச்சமின்றி இறங்கி உட்கார்க்தபடியே, மேலே தண், னிரை வாரி இறைத்துக் கொள்ளலாம். தெளிந்த ர்ே. ஒடுகின்ற ஆற்றில் குளிப்பதே ஒர் ஆனந்தம் மாணிக்க கங்கையில் உட்கார்ந்தால் இடுப்பளவு வரும் நீர்தான் ஒடி யது. ஒட்டம் இடையருமல் இருந்ததால் எங்கும் மணற் பாங்காக இருந்தது. தண்ணீரை இறைத்து விளையாடிக் குளிப்பவர்களுக்கு உல்லாசமாக இருக்கும். . ரோடினேன். அங்கே ஒரு மரம் கிடந்தது. வேறு. கல் இல்லை. காவிரி யாற்றில் நீராடிய பழக்கம் அங்கும். வந்து விட்டது. அந்த மரத்தையே கல்லாகக் கொண்டு.