பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠2 * - கதிர்காம யாத்திரை

பக்தி ஆவேசத்தால் ஆடிக் கூத்திடும்போது இங்கே வந்திருந்தால், அந்தச் சூழ்நிலையினல் நம் உள்ளத்தில் ஒரு வகையான எழுச்சி உண்டாகலாம். ஆனல் மற்றக் காலத்தில் இங்கே வந்தால், இந்தக் கோயிலேக் கண்ட மாத், திரத்தில் எந்த விதமான உணர்ச்சியும் தோன்ருது. மனத் திலே பக்தி இருக்க வேண்டும்; கதிர்காம வேலனுடைய புகழைப் பிறர் சொல்லக் கேட்டிருக்கவேண்டும் நூல் களில் படித்திருக்கவேண்டும். அப்போது இந்த ஒட்டு வில்லைத் திருக்கோயிலே கந்தலோகமாகக் காட்சியளிக்கும். நம்முடைய மனப் பக்குவத்தை அளவிடுவதற்கு ஆண்ட வன் இந்த மூலக் காட்டில் ஒட்டுக் கூரைக் கோயிலில் எழுந்தருளியிருக்கிருன் மனம் பக்தி யுணர்ச்சியில் ஈடு படாதவரையில் இங்கே இன்பம் இல்லை. - --

5 திருக்கோயில்

கதிர்காம மென்னும் தலத்தைப் பற்றிப் பழங்கால முதற்கொண்டு பற்பல வரலாறுகள் வழங்கி வருகின்றன. புராண வரலாறு, கர்ண பரம்பரை வரலாறு. சரித்திர வரலாறு என்று அந்த வரலாறுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கதிர்காமத் தலபுராணம் செய்யுள் வடிவில் சி. நாகலிங்கம் பிள்ளை என்பவரால் இயற்றப் பெற்றிருக் கிறது. இத்தலத்தைப்பற்றிச் சொல்லும் வேறு பல செய் யுள் நூல்களும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப்

பாக்களும் உண்டு.

முருகப்பிரான் சூரனைச் சங்காரம் செய்யும் பொருட் டுத் தென்றிசைக்கண் எழுந்தருளினன். இடையே உள்ள பல தலங்களுக்குச் சென்று அங்கங்கே தங்கி மேற்ெ முன் அப்போது கதிர்காமத்துக்கும் எழுந்தருளி மாணிக்க கங்கையின் கரையில் தன் படைவீட்டை அமைத்துக்