பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠连结 கதிர்காம யாத்திரை

யது. அதன் நடுவே ஒரு சோதி மண்டபமாகிய ஆலயம் உண்டு. பொற்றகடு பரப்பி மணிகளே இழைத்த மண்ட பம் அது. அதன் நடுவில், இந்திர நீலமணிச் சிங்காதனத் தின்மேல் இரு தேவியரோடு வேலைத் திருக்கரத்திலே பிடித்து முருகன் எழுந்தருளி யிருக்கிருன் இந்தச் சோதி மணி மண்டபத்திற்கு எதிரில் வள்ளியம்மை திருக்கோயில் இருக்கிறது. அதன் அருகிலே சமாதி யோக மண்டபம் ஒன்று உண்டு .

இந்த வருணனைகளுக்கும் இப்போது உள்ள திருக் கோயிலுக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை. கோயிலின் திருவாசலில் ஒரு பெரிய பழைய மரக் கதவு இருக்கிறது. அதைத் திறந்தவுடன் முன்னே அர்த்த மண்டபம் என்று சொல்லத் தகும் இடம் ஒன்றைக் காணலாம். அங்கே குத்து விளக்குகள் துரபச் சட்டிகள் முதலியன இருக்கின்றன. அதற்கு அப்புரல் உயர்ந்த மேடைமேல் அடுத்த கட்டு இருக்கிறது. அதுதான் கோயில். அதற்கு ஐந்தாறு படிகள் இருக்கின்றன. படிக்கட்டின்மேல் கதவு கிலே இருக்கிறது. ஆனல் அதைத் திரையிட்டு மறைத்திருக்கிருர்கள். திரைக்குப் பின்னல் கர்ப்பக் கிருகத்துக்குள் என்ன இருக் கிறது என்பது, முருகனுக்கும் அங்கே பூசை செய்யும் ப்ெளத்தர்களுக்கும்ே தெரியும். -

சிவாலயங்களுக்குட் சிறந்தது சிதம்பரம். கோயில் என்று சொன்னலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிதம்பரத்தில் பொன் மன்றத்தின் உள்ளே என்ன. இருக்கிறதென்பது யாவருக்கும் தெரியாது. அது இரகசியம். அதைக் காட்டிலும் பரம இரகசியமாக இருப்பது கதிர் காமக் கோயில்.

கர்ப்பக் கிருகத்தின் திருவாயிலில் தொங்கும் திரையில் முருகன் திருவுருவம் உள்ளது; இரண்டு தேவிமாரோடும்

இதிகாமம்-முதலியா குல் கபாகன் எழுதியது; பக்கம், 7. ".