பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோயில் 25

மயிலின்மேல் விற்றிருக்கும் திருக்கோலம். இது சமீபத்தில் போட்ட திரை. இந்த ஒவியத் திரை இன்னரால் உதவப் பெற்றது என்ற குறிப்புக்கூட ஆங்கிலத்தில் திரையின் ஒரு மூலையில் இருக்கிறது. இந்தத் திரைக்குப் பின் சில திரைகள் இருக்கின்றன. அவ்வப்பொழுது கிடைக்கும் திரைகளே ஒன்றன்மேல் ஒன்ருகப் போட்டிருக்கிருர்கள். திருவாயிற் படியின் கீழே கின்று இந்தக் கோயிற் பூசாரி கள் அந்தத் திரைக்கே பூசை புரிகிருர்கள். o

இங்கே பூசை செய்பவர்களைக் கப்புராளமார் என்று சொல்கிருர்கள். அவர்கள் சிங்களவர்கள் : பெளத்த மதத்தினர். அவர்கள் வாயைக் கட்டிக் கொண்டு மெளனமாகப் பூசை செய்கிருர்கள். தூபதிபம் காட்டி ாகிவேதனம் செய்கிருர்கள். தரிசனத்துக்கு வருகிறவர்கள் பூசை நடக்கும்போது பார்க்கலாம். மற்றச் சமயங், களிலும் அந்த முன் மண்டபத்தில் நின்று தரிசனம் செய்ய லாம். புறக்கண்ணுல் பார்ப்பதற்குத் திரை ஒன்றுதான் இருக்கிறது. அகக்கண்ணுல் பார்ப்பதற்கு எத்தனையோ

ஆடி மாதம் இங்கே திருவிழா நடைபெறுகிறது. உள்ளே யிருந்து அப்பேர்து கப்புராளேமார் எதையோ பரிவட்டத்துக்குள் முடி எடுத்து வருவார்கள். அது விக்கிரகமா, பெட்டியா, வேறு பொருளா என்று தெரியாது. பெட்டி என்றுதான் சொல்கிருர்கள். மூடிய படியே கொண்டுவந்து யானையின்மேல் ஏற்றுகிருர்கள். அலங்களித்த யானே கின்று இந்தப் பெட்டியை ஏற்றிக் கொள்வதற்காக ஓர் இடம் இருக்கிறது. யானைமேல் ஏற்றிய பிறகு ஊர்வலம் புறப்படும். இந்த உலாவைப் பெரஹரா என்று சிங்களத்தில் சொல்கிரு.ர்கள். கண்டியில் கடக்கும் பெரஹரா மிகப் பிரசித்தமானது

உற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் கூடு வார்கள், எல்லோரும் கட்டி கட்டியாகக் கற்பூரத்தை