பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோயில் 있7

அமாவாசைகளில் அரசமரத்தை ஆயிரத்தெட்டுத் தடவை வலம் வரும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. ஆயினும் அரசமரத்தை வணங்குங் திறத்தில் பெளத்தர்கள் கம்பினும் சிறந்தவர்கள். -

கதிர்காமத்தில் உள்ள அரச மரத்தில் பெளத்தர்கள் வெள்ளேக் கொடிகளைக் கட்டியிருக்கிருர்கள். இது அவர் கள் வழக்கம். அங்கே மண்டியிட்டு வணங்குகிருர்கள். முஸ்லிம்களும் இந்த ஆலயத்துக்கு வந்து தொழுகிருர்கள். முருகன் எல்லாச் சமயத்துக்கும் பொதுவானவன் என்ற நினைவு இங்கே உண்டாகும். குழந்தைப் பிரானிடம் காதல், கூராதவர்கள் யார்? பெளத்தர்கள் கதிர்காமக் கடவுளேக் காவல் தெய்வமாக வைத்து வழிபடுகிருர்கள். -

இந்தக் கோயிலின் எல்லேக்கு அப்பால், இதளுேடு ஒட்டிக் கீழ்த் திசையில் தேவயானை அம்மையாருக்கு ஒரு கோயில் இருக்கிறது. அது கிழக்குப் பார்த்த சங்கிதியை உடையது. அதன் விமானம் தமிழ்நாட்டுக் கோயிலில் உள்ளதுபோல இருக்கிறது, அங்கே பூசை புரிபவர் தமிழர். அந்தக் கோயிலின் கிர்வாகமே தனியாக மற்றவர்களிடம் இருக்கிறது. - - . . .

கதிர்காமக் கோயிலுக்குள்ளே உள்ள பொருள் என்ன? பெட்டி ஒன்று இருக்கிறது என்கிருர்கள்.அதற்குள் என்ன இருக்கிறது? அதைக் கண்டாரும் இல்லை; விண்டாரும் இல்லை. யந்திரம் இருக்கிறதென்று சொல்வார் சிலர் , மாணிக்கத்தால் அமைந்த விக்கிரகம் இருக்கிறதென்று. கூறுவார் சிலர், வேல் இருக்கிறதென்று ஊகிப்பவர் சிலர். ஒருவரேனும் இன்னதுதான் இருக்கிறதென்று திட்டமாகச் சொல்வதில்லை. ஆனல் லட்சக்கணக்கான மக்களே இழுக்கும் சக்தி இதனுள்ளே இருக்கிற தென்பது மாத்திரம் உண்மை. அந்தச் சக்தியே இந்திய மக்களே வா வா என்று அழைக்கிறது. உடம்புக்கு நேரும் துன்பங்களையும் பொருட் செலவையும் பாராமல் பக்தர்.